நொய்டா துடுப்பாட்ட அரங்கம்
நொய்டா துடுப்பாட்ட அரங்கம் (Noida Cricket Stadium) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள நொய்டா நகரத்தில் அமைந்துள்ளது. இதை நொய்டா விளையாட்டரங்க வளாகம் என்ற பெயராலும் அழைக்கிறார்கள். நொய்டா பிரிவு 21 ஏ என்ற முகவரியில் இவ்வரங்கம் அமைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி, விளையாடும் இடம் மற்றும் அரங்கத்திற்கான உட்காருமிடங்கள் கட்டப்பட்டிருந்தன. இருக்கை மற்றும் ஊடக வசதிகள் நிறைவடையும் நிலையில் இருந்தன. நொய்டா துடுப்பாட்ட அரங்கில் பல்வேறு உள்ளூர் மற்றும் பெறுநிறுவனங்களின் போட்டிகள் நடந்துள்ளன. நொய்டா துடுப்பாட்ட ஆணையம் விரைவில் முதல் தர விளையாட்டுப் போட்டிகளை நடத்த உள்ளது. முன்னாள் இந்திய துடுப்பாட்ட வீரர் மதன் லால் இம் மைதானத்தின் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். 2012 ஆம் ஆண்டு நொய்டா விளையாட்டரங்கை மேம்படுத்த ஆணையம் முடிவு செய்து 2013 ஆம் ஆண்டில் பணிகள் தொடங்கின. [2] 2016 ஆம் ஆண்டு மார்ச் இறுதிக்குள் பணிகளை முடிப்பதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் 2020 ஆம் ஆண்டு இறுதியில் முடிவடையும் என்று எதிர்நோக்கப்படுகிறது.
அமைவிடம் | நொய்டா, உத்தரப் பிரதேசம் |
---|---|
ஆள்கூறுகள் | 28°35′22″N 77°20′22″E / 28.589441°N 77.339451°E |
உருவாக்கம் | 2013 |
இருக்கைகள் | 25,000 [1] |
உரிமையாளர் | நொய்டா விளையாட்டு ஆணையம் |
குத்தகையாளர் | உத்திரப்பிரதேச துடுப்பாட்ட அணி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Noida hopes to hold IPL matches at stadium" (in en). 5 April 2016. http://www.hindustantimes.com/noida/noida-hopes-to-hold-ipl-matches-at-stadium/story-kM3ZNGzrL1qrOKWHSHpjPN.html. பார்த்த நாள்: 25 April 2017.
- ↑ "Madan Lal: Sports infrastructure great in Noida, want to bring IPL here". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 25 April 2017.