நோ போர்டர் நெற்வேர்க்

நோ போர்டர் நெற்வேர்க் அல்லது எல்லைகள் இல்லா வலைப்பின்னல் என்பது ஐரோப்பாவில் தளர்வாக பிணைக்கப்பட்ட தனித்தியங்கும் அமைப்புகள், குழுக்கள், தனிநபர்களைக் கொண்ட ஒரு வலைப்பின்னல் ஆகும். நகர்வுச் சுதந்திரத்தை இவர்கள் முழுமையாக ஆதரிக்கிறார்கள். மனிதக் குடிப்பெயர்தல்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை இவர்கள் எதிர்க்கிறார்கள். இந்த நோக்களுக்காக எதிர்ப்புப் போராட்டங்கள், நேரடி நடவடிக்கைகள் என்று பல்வேறு செயற்பாடுகளில் இவர்கள் ஈடுபடுகிறார்கள்.

ஐரோப்பாவில் இறுக்கப்பட்டு ஒருமுகப்படுத்தப்பட்டு வரும் குடிவரவுக் கொள்கையை எதிர்த்து இவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள், அகதிகள், ஆதரவாளர்களைக் கொண்ட கூட்டமைப்புகளைக் கட்டமைக்க முயற்சி செய்கிறார்கள். "எல்லை இல்லை, தேசம் இல்லை, திருப்பி அனுப்புவதை நிறுத்து" ("No Border, No Nation, Stop Deportations!"), "யாரும் சட்டப்புறம்பானவர்கள் இல்லை ("No one is illegal"), "நகர்வுச் சுதந்திரம், குடியிருப்புச் சுதந்திரம், வருவதற்குச் உரிமை, வெளியேறுவதற்கு உரிமை, இருப்பதற்கு உரிமை"("Freedom of Movement, Freedom of Residence: Right to Come, Right to Go, Right to Stay!") ஆகியவை இவர்களின் கோசங்களில் சிலவாகும்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோ_போர்டர்_நெற்வேர்க்&oldid=1369656" இலிருந்து மீள்விக்கப்பட்டது