பகதூர் குப்தா

இந்திய குறுக்கு நாடு பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்

பகதூர் குருங் குப்தா (Bahadur Gurung Gupta) இந்திய நாட்டைச் சேர்ந்த பனிச்சறுக்கு வீரர் ஆவார். இவர் 1976 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி பிறந்தார். [1] [2] 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார். அங்கு இந்திய நாட்டினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் . அவர் குறுக்கு நாடு பனிச்சறுக்கு விளையாட்டின் ஆண்களுக்கான தடகள பிரிவு நிகழ்வில் பங்கேற்றார். தனது நிகழ்வில் 78 ரன்களை முடித்தார்.

பகதூர் குப்தா
தனிநபர் தகவல்
பிறப்பு07-செப்டம்பர்-1976 (வயது 46)
இந்தியா
தொழில்இந்தியத் தரைப்படை, தடகள வீரர்
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுகுறுக்கு நாடு பனிச்சறுக்கு விளையாட்டு

2005 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் குல்மார்க்கில் நடந்த சர்வதேச குறுக்கு நாடு பனிச்சறுக்கு பந்தயத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அவர் போலு கெரேட் மற்றும் உலுடாக் பால்கனில் நடைபெற்ற குறுக்கு நாடு பனிச்சறுக்கு பந்தயங்களிலும் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டார்.

1999 ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்தில் சேர்ந்தார். பின்னர் 15 வயது வரை பயிற்சியைத் தொடங்கினார். மேலும் தேசிய சாம்பியன்சிப்பை வென்றார். 2002 ஆம் ஆண்டு அவுலியில் நடந்த தேசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த தடகள வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [3]

மேற்கோள்கள் தொகு

  1. "GURUNG Gupta Bahadur". International Ski Federation. பார்க்கப்பட்ட நாள் 31 October 2013.
  2. "Bahardur Gurung Gupta". Sports Reference. Archived from the original on 18 April 2020. பார்க்கப்பட்ட நாள் 31 October 2013.
  3. "Racing up the slope". இந்தியன் எக்சுபிரசு. May 19, 2005. http://www.indianexpress.com/oldStory/70610/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகதூர்_குப்தா&oldid=3842375" இலிருந்து மீள்விக்கப்பட்டது