பகுதிப்பொருள் தடுப்பு மருந்து

பகுதிப்பொருள் தடுப்பு மருந்து (subunit vaccine) என்பது ஒட்டு மொத்த பாக்டீரியா அல்லது வைரசை உடலுக்குள் செலுத்தும் அபாயத்தைச் செய்யாமல் நுண்ணுயிரிப் புரதம் அல்லது நுண்ணுயிரிச் சர்க்கரையின் ஒரு பகுதியை மட்டும் மனித உடலுக்குள் செலுத்தி நோய் எதிர்ப்பு முறைமையைத் தூண்டும் தடுப்பு மருந்தேற்ற முறை.

ஹெப்படைடிஸ் பி தடுப்பு மருந்து ஈஸ்ட் உதவியுடன் பெறப்படும் புரதப் பகுதிப் பொருள் தடுப்பு மருந்து. இவற்றை 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தரலாம்.

டைஃபாய்டு காய்ச்சலுக்கான Vi உறைப் பல்சர்கரை தடுப்புமருந்து, நூமோ காக்கசு பல்சர்க்கரை தடுப்பு மருந்து ஆகியன கார்போஹைட்ரேட் (சர்க்கரை) பகுதிப் பொருள் தடுப்பு மருந்துகள். இவற்றுக்கு மனித உடலில் நினைவு இருக்காது. மேலும் இவற்றை 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தர இயலாது.