பகுப்பு பேச்சு:இந்தியாவில் கிறிஸ்தவம்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Kanags
@AntanO: தமிழ் விக்கியில் கிறித்தவம் என்றே தமிழில் எழுதி வருகிறோம். அவ்வாறிருக்க இப்பகுப்பின் தலைப்பை எதற்காக மாற்றினீர்கள் என அறிய ஆவல்.--Kanags \உரையாடுக 22:30, 2 சூன் 2017 (UTC)
- ஆம், உங்களைப் போலவே நானும் கிறித்தவம், இசுலாம் என எழுதியுள்ளேன். ஆனால், வணிகப் பெயர்கள் என்ற பெயரில் தமிழ் இலக்கணப் பிழையுடனும், வடமொழிச் செறிவிலும் எழுதப்படுகிறது. வணிகப் பெயர்கள் உட்பட பிற தலைப்புக்களுக்குக் கொடுக்கப்படும் சலுகை சில சமயங்கள் விடயத்தில் மறுதலிக்கப்படுவதை "வேறு" பொருளில் பார்க்க வேண்டுமோ என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. மேலும், த.வி.யில் அடிக்கடி கொள்கை, வழிகாட்டல் மாற்றம் அல்லது தெளிவற்ற தன்மை கிறிஸ்தவ, யூத, இஸ்லாமிய சமயங்களில் தலைப்புக்களில் மாறாமல் இருப்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இச்சமயங்களின் தலைப்புக்களில் வடமொழிக்கலப்புத் தவிர்ப்பை நானும் தவறுதலாகப் பயன்படுத்திவிட்டேன் என எண்ணுகிறேன். மேலும் சிலர் வடமொழியைத் தாராளமாகப் பயன்படுத்தினாலும் சில சமயங்களின் விடயத்தில் மட்டும் கவனமாகச் செயல்படுவது உறுத்தலாகவுள்ளது. இது தொடர்பில் மற்றவர்களின் கருத்துத் தேவையென்றால் பொது இடத்தில் உரையாடலாம். நன்றி. --AntanO 04:13, 3 சூன் 2017 (UTC)
- உங்கள் கருத்து ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. இயன்றவரை கிரந்தம் கலைத்து நல்ல தமிழில் எழுதுவது என்பதே விக்கியில் நடைமுறையில் உள்ளது. மிக நீண்ட காலமாக கிறித்தவம் என்றே எழுதி வருகிறோம். நீங்கள் இப்போது இதற்கு புதிதாக சமய சாயம் பூசுகிறீர்கள். இப்போக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. வேறு சமயக் கட்டுரைகளில் இவ்வாறு கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்படிருந்தால், அவற்றை முடிந்தவரை திருத்துவதே நல்லது. சில சொற்களைக் கிரந்தம் தவிர்த்து எழுத முடியாது என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனாலும் சிலர் முற்றிலுமாகக் (100%) கிரந்தம் தவிர்த்தும் எழுதுகிறார்கள். எந்த ஒரு கிரந்த எழுத்தும் இல்லாது 700 பக்கங்களைக் கொண்ட ஒரு நூலை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்தும் இருக்கிறார்கள்.--Kanags \உரையாடுக 04:29, 3 சூன் 2017 (UTC)
- நான் சமய சாயம் பூசுகிறிறேன் என்றால், சமய இருட்டடிப்பு என்றும் வாதிடலாம். ஆகவே, நீங்களும் நானும் இங்கு முடிவெடுப்பதைவிடுத்து, விக்கி கொள்கைப் பக்கம், வழிகாட்டல் பக்கம் அல்லது ஆலமரத்தடியில் உரையாடி முடிவெடுக்கலாம். --AntanO 05:41, 3 சூன் 2017 (UTC)
- கிரந்தப் பயன்பாடு பற்றி ஏற்கனவே நிறைய இடங்களில் உரையாடப்பட்டு சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து மேலும் விவாதிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் சமய இருட்டடிப்பு குறித்து கொள்கைப் பக்கத்தில் நீங்கள் முறையிடலாம். அப்படி ஏதும் இதுவரையில் யாரும் முறையிட்டதாகத் தெரியவில்லை. அதுவரையில் கட்டுரைகளில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 05:52, 3 சூன் 2017 (UTC)