சுற்றுச்சூழல், வாழ்சூழல், சூழல்

தொகு

சூழலியல் என்பது ecology. சுற்றுச்சூழல், வாழ்சூழல் என்பவையும் சூழலையே குறிக்கின்றன. சூழ்ந்த்ருப்பது சூழல்தான். சூழல் என்பது பிற சொற்களுடன் இணைந்து பல பொருள் தரும்பொதுச் சொல்லெனினும் பொதுவாகச் சூழல் சூழ்ந்திருப்பதைக் குறிப்பதால் சுருக்கமாகவும் விளக்கமாகவும் உள்ளது. சூழலியல் மிகவும் முக்கியமான அறிவியற்றுறை. சூழல் என்ற சொல் ஈழத்தில் மிகவும் பரவலாகப் பயன்படுகிறது. சூழலியல் ஓர் அறிமுகம் என்ற தமிழக (பூவுலகின் நண்பர்கள் வெளியீடு) நூலே நான் வாசித்த சூழலியல் தொடர்பான முதல்நூல். ஆதலால் இது தமிழகத்திலும் பயன்பாட்டிலுள்ள சொல்லே. ஆதலால் வாழ்சூழலியல், சுற்றுச் சூழலியல் ஆகிய பகுப்புக்களை நீக்கி அவற்றின் உள்ளடக்கத்தை இந்தச் சூழலியல் பகுப்பினுள் சேர்க்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --கோபி 14:31, 19 டிசம்பர் 2006 (UTC)

நீங்க சொன்னபிறகு யோசிச்சுப் பார்த்தா சுற்று தேவையில்லைன்னு தான் தோணுது. ஆனா, தமிழ்நாட்டுல சுற்றுச்சூழல்-னு சொல்றது பெரும்புழக்கத்தில் இருங்குங்கிறத இங்க குறிப்பிட விரும்புகிறேன். சூழலியல்னே பகுப்புப் பேரே வைச்சுக்கலாம்--Ravidreams 14:35, 19 டிசம்பர் 2006 (UTC)
தமிழகத்தில் சுற்றுச்சூழல் என்னும் சொல் பெருவழக்காயிருக்கிறதென்றே உணர்ந்திருந்தேன். ஆனால் சூழல் என்பது பயன்படாததொன்றல்ல. அத்துடன் ஈழத்தவராலும் சுற்றுச்சூழல் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். ஆதலால் நீங்கள் குறிப்பிடுவதுபோல் சூழலியல் என்பதை பகுப்புக்குப் பயன்படுத்தலாம். --கோபி 14:38, 19 டிசம்பர் 2006 (UTC)

பகுப்பு பேச்சு:சுற்றுசூழலியல்

தொகு

சூழல், சுற்றுசூழல், வித்தியாசம் உண்டா?--Natkeeran 18:54, 17 ஜூலை 2006 (UTC)

சூழல் என்பது பல இடங்களிலும் வரக்கூடிய ஒரு பொதுச்சொல். எனவே சுற்றுபுறச் சூழல் என்பது environment என்பதைக்குறிக்கும். சுற்றுப்புறம் என்பது surrounding area, region. சூழல் ஏனும் சொல் சுற்றுப்புறத்தில் நிலவும் பல்வேறு நிகழ்வுகள்,இயக்கங்கள், நிலைகளைக் குறிக்கும். இன்னும் சுருக்கமான சொல்ல வேண்டுமெனில் சூழ்மை என்றும் சொல்லலாம். போதிய கலைச்சொல் ஏற்கும் பக்குவம் இல்லா நிலையில், அகராதி பார்க்கும் பழக்கம் இல்லாத நிலையில் (அகராதியில் இவகைச் சொற்களூம் இல்லாமல் இருப்பதால்) சற்று விளக்கமாக படித்தவுடன் அதிக குழப்பம் இல்லாமல் புரிந்துகொள்ளுமாறு சொல் படைத்தல் நலம் என்று நினைக்கிறேன்.--C.R.Selvakumar 19:09, 17 ஜூலை 2006 (UTC)செல்வா

சுட்டிகள்

தொகு

http://www.treasurehouseofagathiyar.net/01400/1479.htm --Natkeeran 20:29, 19 செப்டெம்பர் 2006 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு_பேச்சு:சூழலியல்&oldid=4069390" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சூழலியல்" page.