பகுப்பு பேச்சு:பள்ளிகள்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Natkeeran
அண்மையில் பள்ளிகள் தொடர்பாக கட்டுரைகள் வரத் தொடங்கியுள்ளதால் இவற்றின் குறிப்பிடத்தக்கமை தொடர்பாக முடிவெடுப்படுது நன்று.
ஆங்கில விக்கிப்பீடியாவில் இது தொடர்பான வழிகாட்டல்கள்/உரையாடல்கள்:
- https://en.wikipedia.org/wiki/Wikipedia:Notability_(organizations_and_companies)#Schools
- https://en.wikipedia.org/wiki/Wikipedia:Articles_for_deletion/Common_outcomes#Schools
மேற்கண்ட பக்கங்களில் இருந்து புரிந்து கொள்வது:
- பொதுவாக, தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளுக்குக் குறிப்பிடத்தக்கமை வலுவாக இருந்தால் அன்றி, தனிக்கட்டுரைகள் தேவைப்படுவதில்லை. அவற்றை, அப்பள்ளிகளை நிருவகிக்கும் மாவட்ட அளவிலான கல்வி அமைப்பின் பக்கத்துக்கு வழிமாற்றலாம். அல்லது, அப்பக்கத்துடன் ஒன்றிணைக்கலாம். இத்தகைய அமைப்பு இல்லாத போது, அப்பள்ளி அமைந்திருக்கும் ஊர் தொடர்பான கட்டுரையுடன் இணைக்கலாம். அல்லது, வழிமாற்றலாம்.
- பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மேனிலைப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றுக்கு அவை உண்மையில் இருக்கின்றன என்று நிறுவ இயன்றாலே போதும். அவற்றுக்குத் தனிக்கட்டுரை அமைக்கலாம்.
இவ்வாறான வழிகாட்டல்கள் இருந்தாலும் 300 பேர் பயிலும் தொடக்கப் பள்ளிகள் கூட ஆங்கில விக்கிப்பீடியாவில் தக்க வைக்கப்பட்டுள்ளன.
தமிழ் விக்கிப்பீடியாவில் பள்ளிகள் தொடர்பாக என்ன நிலைப்பாடு எடுக்கலாம். கருத்துகள் தேவை. --இரவி (பேச்சு) 08:59, 11 சூன் 2017 (UTC)
தமிழ்நாட்டுச் சூழலில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல்வகைப்பட்ட பள்ளிகள் குறித்து பதியப்படும் செய்திகளைத் துப்புரவிற்கு பின் ஏற்கலாம். --மணி.கணேசன்
- இலங்கையில் பள்ளிகள் ஒரு ஊரின் முக்கிய நிறுவனமாகப் பார்க்கப்படுகிறது. சில வசதிபடைத்த பள்ளிகள் நிறைய வெளியீடுகளைக், வெளி ஆதரவு அமைப்புகளைக் கொண்டிருக்கும். ஆனால் கூடிய மாணவர்கள் பயிலும் வசதி குறைந்த பள்ளி வெளியீடுகளை, வெளி ஆதரவு அமைப்புகளைக் கொண்டி இருக்காது. மலேசியாவிலும் 500 வரையான தமிழ்ப் பள்ளிகளே உள்ளன. ஆனால் அவற்றின் சமூக, வரலாற்று முக்கியத்துவம் முக்கியமானது ஆகும். மணி.கணேசன் கூறியது போன்று பள்ளிகளைப் பற்றிய கட்டுரைகளை நெகிழ்ச்சித் தன்மையுடன் ஏற்கலாம். விளம்பரப்படுத்தல் யாராவது செய்ய முயன்றால், வழமை போன்று அவதானித்து தடுக்கலாம். --Natkeeran (பேச்சு) 12:46, 16 சூன் 2017 (UTC)