பகுப்பு பேச்சு:வேதியியல்
ஒழுங்கமைவு தேவைப்படும் பகுப்பு |
வேதியியல் என்னும் சொல் Chemistry என்பதைக்குறிப்பதாகக் கொண்டால், Electrochemistry என்பதை மின்வேதியியல் என்று குறிப்பதே முறை. மின்ரசாயினவியல் என்று குறிப்பது தவறு. ஏன்னெனில், கலைச்சொற்கள் தரப்படுத்தப்படவேண்டும். ரசாயனம் என்பது பழங்காலத்தில், பாதரசம் (mercury) வெகுவாக பயன் படுத்தப்பட்டது பற்றி chemistry என்னும் துறையைப் பொதுவாகக் குறித்தது. ரசம் என்பது liquid, juice, முதலிய பொருள் தரும். பாதரசம் நீர்மப்பொருளாய் (திரவப்பொருளாய்), இருப்பதால், ரசாயனம் எனப் பெயர் கொண்டு இருந்தது. இன்று ஒரு பொருளில் இருந்து ஒருபொருளைப்பிரிக்க, வேறு படுத்தி, வேற்றுமைப்படுத்திக் காட்ட பயன் படும் துறையை வேதியியல் என்று வழங்குகிறோம். என்னுடைய பரிந்துரை இயைபியல் (இயைபு என்றால், ஒன்றோடு ஒன்று இணைந்து, பிணைந்து இயங்குதல் என்று பொருள்). நான் இயைபியல் என்று எழுதவில்லை. பரவலாகப் பயன் பட்டு வரும் வேதியியல் என்றுதான் எழுதி உள்ளேன். ஒர் இடத்தில் வேதியியல் என்றும் வேறு ஒர் இடத்தில் ரசாயனம் என்று எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். எல்லா இடங்களிலும் முடியாமல் இருக்கலாம். இவ்விடத்தில் எளிமையாகச் செய்யலாம். எண்ணிப்பாருங்கள்! - செல்வா (C.R.Selvakumar).
மேலும் தொடர்பான தமிழ்ச்சொற்களை எண்ணிப்பருங்கள்:
வேதித்தல் = வேறுபடுத்தல், பிரித்துக்காட்டுதல் (பிளத்தல், துளைத்தல் என்றும் பொருள் படும்),
வேதை = பொன்னாக்கல், வேதித்தல், துளைத்தல், இரேகை (பிரிந்து செல்லும் கோடுகளால் இப்பெயர்) வேது = கார மருந்து, வேறுபாடு (வேது கொடுத்தல் ஒத்தடம் கொடுத்தல் என்பது வேது என்றால் வெம்மை என்னும் பொருளில் இருந்து பிறந்த பொருள்கள்). மின்வேதியியல் என்பது மின் ஆற்றாலைப் பயன் படுத்தி அறியப்படும் வேதியியல் முறைகளைப்பற்றியது. - C.R.Selvakumar செல்வா
- இராசயனவியல் என்பது இலங்கை வழக்கம். மின்ரசாயனவியல் என்பது அதிலிருந்து மருவுகின்றது. எனினும் வேதியியல் என்பது பொதுவாக பயன்படுத்தப்படுவதால், மின்வேதியியல் என்பதை பயன்படுத்தி கொள்ளலாம். விரைவில் மாற்றி விடுகின்றேன். கருத்துக்களுக்கு நன்றி.--Natkeeran 01:10, 25 மே 2006 (UTC)
இலங்கை வழக்கு என்பதை அறிவேன். தமிழ்நாட்டிலும் இவ்வழக்கே இருந்தது. நானும் ரசாயனம் என்றுதான் படித்தேன். சுமார் 1970களில் தொடங்கி மேலும் மேலும் செம்மையான மொழிப்பாங்கு வளரத்தொடங்கியது. பயனர்:C.R.Selvakumar செல்வா
வேதியல் vs வேதியியல் ???
தொகுவேதியல், வேதியியல் எது சரி? --Natkeeran 02:08, 25 மே 2006 (UTC)
I donno which is right or wrong but வேதியியல் is used in TN text books and I am for continuing it in all contexts--ரவி 15:22, 25 மே 2006 (UTC)
வேதியியல் என்று இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன். வேதி+இயல் = வேதியியல். [[பயனர்:C.R.Selvakumar] செல்வா என்னுடைய சொல்லாட்சியில் உள்ள பிழையைத் திருத்தி உள்ளேன். பயனர்:C.R.Selvakumar செல்வா--C.R.Selvakumar 15:55, 25 மே 2006 (UTC)
- கருத்துக்களுக்கு நன்றி. நீங்கள் இருவரும் சொல்வதுக்கு அமைய மீண்டும் தேவையான மாற்றங்களை செய்து விடுகின்றேன். --Natkeeran 16:11, 25 மே 2006 (UTC)
- வேதிப்பொறியியல் என்பது வேதியியல் அல்ல. இது கட்டுரையிலே தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். இதை பொறியியல் கீழ் இடுமாறும் கேட்டுக்கொள்கிறேன் ? 121.247.218.193 12:56, 25 ஏப்ரல் 2008 (UTC) (பயனர்:வினோத்)