பகுரைனிய அரங்கு

பகுரைனிய அரங்கு (theatre of Bahrain) இன்றைய வடிவில் 20 ஆம் நூற்ராண்டில் அந்நாட்டில் கல்வி தொடங்கிய பின்னர் தோன்றியதாகும். முன்பு பகுரைனில் நிழற்கூத்துகளும் பாவைக்கூத்துகளும் பரவலாக விளங்கினாலும் ஐரோப்பிய வடிவ நாடகங்கள் முதலில் பள்ளிகளில் அறிமுகப் படுத்தப்பட்டன.பின்னர் அரபு நாடகாசிரியர்களால் எழுதப்பட்ட நாடகங்கள் பள்ளிப் பாட்த்திட்ட்த்தில் சேர்க்கப்பட்டன.[1]

பொது மக்கள் நாடகத்தில் பேரார்வம் காட்டலாயினர். தாவ்பிக் அல்-அக்கிம், சாதல்லா வான்னவுசு போன்ற நாடகங்கள் அவர்களைப் பெரிதும் கவர்ந்தன. 1970 களில் அலி அல் சார்கவி, இப்ராம் அல்-அராயேத், அக்குவில் சவார், யூசஃப் அல்-ஆம்டன் போனற நாடகாசிரியர்களின் நாடகங்கள் பகுரைனில் நாடக அரங்கின் பொற்காலத்தை உருவாக்கின.[2] பகுரைன் மூன்று அரங்குக் குழுமங்கலைப் பேணுகிறது. அவையாவன: அவால் அரங்கு, அல்-சாழ்சிரா அரங்கு, அல்-சவார் அரங்கு என்பனவாகும். பகுரைனில் 2012 இல் ஆயிரம்பேர் அமரும் பகுரைன் தேசிய அரங்கு திறக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Rubin 1999, ப. 4.
  2. Rubin 1999, ப. 6.

நூல்தொகை

  • Rubin, Don (1999). The World Encyclopedia of Contemporary Theatre: The Arab world. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415059282. பார்க்கப்பட்ட நாள் 5 June 2015. {{cite book}}: Invalid |ref=harv (help)
  • Michalak-Pikulska, Barbara. Theatre in the United Arab Emirates (PDF). பார்க்கப்பட்ட நாள் 5 June 2015. {{cite book}}: |website= ignored (help); Invalid |ref=harv (help)
  • Torstrick, Rebecca L.; Faier, Elizabeth (2007). Culture and customs of the Arab Gulf states (illustrated ed.). Westport: Greenwood. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780313336591. {{cite book}}: Invalid |ref=harv (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுரைனிய_அரங்கு&oldid=2417008" இலிருந்து மீள்விக்கப்பட்டது