பக்கப் பரப்பு
ஒரு பொருளின் பக்கப் பரப்பு (lateral surface) என்பது அப்பொருளின் அடி மற்றும் மேல் பக்கங்கள் தவிர்த்த பிற பக்கங்களின் பரப்பினைக் குறிக்கும்.
ஒரு கனசதுரத்தின் பக்கப்பரப்பு என்பது அதன் நான்கு பக்கங்களின் பரப்பாகும். :கனசதுரத்தின் பக்க அளவு = எனில் அதன் ஒரு பக்கத்தின் பரப்பு:
- Aface = a ⋅ a = a2.
எனவே கனசதுரத்தின் பக்கப்பரப்பு:
- a ⋅ a ⋅ 4 = 4a2.
- ஒரு பட்டகத்தின் பக்கப்பரப்பினை அதன் அடிப்பக்கத்தின் சுற்றளவு மற்றும் உயரத்தின் பெருக்கற்பலனாகக் கணக்கிடலாம்.[1]
- ஆரம் r, உயரம் h கொண்ட நேர்வட்ட உருளையின் பக்கப்பரப்பு:
- A = 2πrh.
- ஒரு பிரமிடின் பக்கப்பரப்பானது அதன் அடிப்பக்க முக்கோணம் தவிர்த்த இதர பக்க முக்கோணங்களின் பரப்புகளின் கூடுதலாகும்.
- ஒரு கூம்பின் பக்கப்பரப்பு
- கூம்பின் ஆரம்; சாய்வு உயரம்; உயரம்.