பக்கவாட்டு சுரப்பி

பக்கவாட்டு சுரப்பி (Flank gland) என்பது சிறப்புச் சுரப்பிகளில் ஒன்றாகும். இது உயிரியின் பக்கங்களிலும் பின்புறத்திலும் அமைந்துள்ளது. இவை வால்கள், மூஞ்சூறு, வெள்ளெலிகள் மற்றும் கிரிச்டிடே குடும்பத்தின் பிற உயிரினங்கள் உள்ளிட்ட சில கொறித்துண்ணிகளில் முக்கியமாகக் காணப்படுகிறது.[1][2]

பக்கவாட்டு சுரப்பி அடிவயிற்றின் ஒவ்வொரு பக்கத்திலும் பக்கவாட்டில் அமைந்துள்ளது. இது பெரும்பாலும் ஆண் மற்றும் பெண் என இரு உயிரிகளிலும் உள்ளது. இருப்பினும் இது சிற்றினங்கள் அடிப்படையில் மாறுபடும். மேலும் பொதுவாக ஆண்களில் பெரிய அளவில் காணப்படும்.[1][3] சில உயிரிகள், பக்கவாட்டு சுரப்பிகளை பொதுவாகப் பின்னங்கால் மூலம் உராய்ந்து எண்ணெய் பொருளின் சுரப்பை ஏற்படுத்துகிறது. இப்பகுதியில் சுற்றியுள்ள முடி தெளிவாகத் தெரியும். இவை ஒரு வகை இரசாயன வாசனையினை வெளிப்படுத்தும்.[2] இந்த வேதிப்பொருள் ஒரே சிற்றினத்தில் மாறுபடுவதுடன், பாலியல் முதிர்ச்சியின் காரணமாகவும் ஒரு தனிநபரில் வேறுபடுகின்றன.[4] பக்கவாட்டு சுரப்பியின் சுரப்பு வழியாக வாசனை குறித்தல் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, சில ஆண் மைக்ரோடீன் கொறித்துண்ணிகள் இதனைப் பயன்படுத்தி அடையாளமிடுகின்றன. இவை பக்கவாட்டு சுரப்பியைத் தங்கள் காலால் மீண்டும் மீண்டும் சொறிந்து, பல முறை தரையில் வேதிப்பொருளை இடுகின்றன.[5]

ஆதிக்கம் செலுத்தும் தனிநபர்களில் சுரப்பு இடத்தில் ரோமத்தின் பொருத்தம் அடிபணிந்த தனிநபர்களைக் காட்டிலும் மிகவும் வெளிப்படையாகக் காணப்படும். இது சில காட்சி சமிக்ஞையாகச் செயல்படுகிறது.[2] ஆண் தங்க வெள்ளெலிகள் மற்றும் ஆய்வக எலிகள் சண்டையிடுவதற்கான சோதனை சான்றுகளும் உள்ளன. இதன் பிறகு வெற்றி பெற்ற உயிரி பிறவற்றை விட வாசனையை அதிகம் குறிக்கும். இது ஆதிக்கம் செலுத்தும் உயிரியால் தங்களுக்கான பிராந்தியத்தை நிறுவப் பயன்படுத்தப்படுகிறது.[6][7] கொறித்துண்ணிகள் தனிநபர்களின் இச்சுரப்பு நாற்றங்களை நினைவில் வைத்திருக்க முடியும் என்பதற்கும், பழக்கமானவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையில் பாகுபாடு காட்ட முடியும் என்பதற்கும் சான்றுகள் உள்ளன. நாற்றங்களின் இரசாயனக் குணங்கள் மிகவும் ஒத்திருந்தாலும் கூட, இவை பழக்கமில்லாத உறவினர்களுக்கும் அல்லாதவர்களுக்கும் இடையில் பாகுபாட்டைக் காட்ட முடியாது.[8][9] கூடுதலாக, பெண் தங்க வெள்ளெலிகள் பழக்கமான உறவினர் அல்லாத நாற்றங்களுக்குப் பாலியல் விருப்பத்தைக் காட்டுகின்றன.[10] பக்கச் சுரப்பியின் அளவு தனிநபர்களிடையே வேறுபடுகிறது. இருப்பினும் பக்கச் சுரப்பிகளின் அளவு மற்றும் ஆண்களில் இனப்பெருக்க வெற்றி இடையிலான தொடர்பு குறித்த ஆய்வுகள் முரண்பட்ட முடிவுகளைத் தருகின்றன.[11][12]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 W. B. Quay, "The Specialized Posterolateral Sebaceous Glandular Regions in Microtine Rodents", Journal of Mammalogy, Vol. 49, No. 3 (Aug., 1968), pp. 427-445, accessed 29 October 2012
  2. 2.0 2.1 2.2 Jerry O. Wolff and Martha F. Johnson, "Scent Marking in Taiga Voles, Microtus xanthognathus" Journal of Mammalogy, Vol. 60, No. 2 (May, 1979), pp. 400-404, accessed 29 October 2012
  3. Cantoni et al., "Intra- and Interindividual Variation in Flank Gland Secretions of Free-ranging Shrews (Crocidura russula)". Journal of Chemical Ecology (1996) Vol. 22, No. 9, pp. 1669–88, accessed 29 October 2012
  4. A. S. Parkes and H. M. Bruce, "Olfactory Stimuli in Mammalian Reproduction" Science, New Series, Vol. 134, No. 3485 (Oct. 13, 1961), pp. 1049-1054, accessed 29 October 2012
  5. Frederick J. Jannett, Jr., "Drum-marking by Arvicola richardsoni and Its Taxonomic Significance", American Midland Naturalist, Vol. 92, No. 1 (Jul., 1974), pp. 230-234, accessed 29 October 2012
  6. Katherine Ralls, "Mammalian Scent Marking", Science, New Series, Vol. 171, No. 3970 (Feb. 5, 1971), pp. 443-449, accessed 29 October 2012
  7. Michael N. Lehman and David B. Adams, "A Statistical and Motivational Analysis of the Social Behaviors of the Male Laboratory Rat", Behaviour, Vol. 61, No. 3/4 (1977), pp. 238-275, accessed 29 October 2012
  8. Giora Heth, Josephine Todrank and Hynek Burda, "Individual Odor Similarities within Colonies and across Species of Cryptomys Mole Rats", Journal of Mammalogy, Vol. 83, No. 2 (May, 2002), pp. 569-575, accessed 29 October 2012
  9. Robert E. Johnston, "Chemical Communication in Rodents: From Pheromones to Individual Recognition", Journal of Mammalogy, Vol. 84, No. 4 (Nov., 2003), pp. 1141-1162, accessed 29 October 2012
  10. Jill M. Mateo and Robert E. Johnston, "Kin Recognition and the 'Armpit Effect': Evidence of Self-Referent Phenotype Matching", Proceedings: Biological Sciences, Vol. 267, No. 1444 (Apr. 7, 2000), pp. 695-700, accessed 29 October 2012
  11. Masakado Kawata, "Mating System and Reproductive Success in a Spring Population of the Red-Backed Vole, Clethrionomys Rufocanus Bedfordiae", Oikos, Vol. 45, No. 2 (Oct., 1985), pp. 181-190, accessed 29 October 2012
  12. Masakado Kawata, "Mating Success, Spatial Organization, and Male Characteristics in Experimental Field Populations of the Red-Backed Vole Clethrionomys rufocanus bedfordiae", Journal of Animal Ecology, Vol. 57, No. 1 (Feb., 1988), pp. 217-235, accessed 29 October 2012
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்கவாட்டு_சுரப்பி&oldid=4012086" இலிருந்து மீள்விக்கப்பட்டது