பக்கிர் அலம்கிர்

பக்கிர் அலம்கிர் (Fakir Alamgir, பிப்ரவரி 21, 1950 – சூலை 23, 2021) வங்காளதேசத்தைச் சேர்ந்த நாட்டுப்புற மற்றும் பாப் பாடகர் ஆவார். 1971 இல் நடைபெற்ற பங்களாதேஷ் விடுதலை போரின் பின்னர் இவரது பாடல்கள் மக்களை உத்வேகபடுத்துபவையாக இருந்தது. இவரது பிரபல்யமான பாடல்களாவன " ஓ ஷொகினா", "ஷந்தகர்", " நெல்சன் மண்டேலா","நாம் ரர் ச்சில்லோ ஜோன் கென்றி" என்பனவாகும் [3]. 1999 இல் பங்களாதேஷ் அரசாங்கம் இவருக்கு " எக்ஷே பாடக்" எனும் விருதை வழங்கி கௌரவித்தது [4][3].

பக்கிர் அலம்கிர்
Fakir Alamgir
Alamgir (Feb 2014)
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ফকির আলমগীর
பிறப்பு21 பெப்ரவரி 1950 (1950-02-21) (அகவை 73)[1]
இறப்பு23 சூலை 2021(2021-07-23) (அகவை 71)[2]
இசைத்துறையில்1966 – 2021

வாழ்க்கைக் குறிப்பு தொகு

1966 இல் இவரது இசை வாழ்க்கை தொடங்கியது. இவர் 1969 இல் கிழக்கு பாகிஸ்தான் உதயத்தின் பின்னர் தன்னை பாடல்கள் பாடுவதற்காக அர்பணித்தார் [5]. விடுதலைப்போரின் போது இவர் சுவாதின் பெங்ல பேத்தர் கேந்ராவில் பணியாற்றியுள்ளார். இவர் 1976 இல் "ரிஷிஷ் ஷில்பி ஹோஷ்தி" இன அழைக்கபடும் கலாச்சார மன்றத்தின் நிறுவுனர் ஆகவும் செயற்பட்டுள்ளார் [6]. மேலும் இவர் "கோன சங்கித் சாமான்ய பாரிஷட்" என்பதன் தலைவராகவும் பதவி வகித்தவர்.

இவர் சிறந்த எழுத்தாளரும் ஆவார். இவரது முதல் நூலான "செனா சீனா" 1984 ல் பிரசுரிக்கப்பட்டது. 2013 இல் இவர் மூன்று நூல்களை பிரசுரித்திருந்தார் [7].

விருதுகள் தொகு

  • எக்ஷே பாடக்
  • பஷானி பாடக்

மேற்சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்கிர்_அலம்கிர்&oldid=3759691" இருந்து மீள்விக்கப்பட்டது