பக்கோடானோமிக்சு
பக்கோடானோமிக்சு (Pakodanomics-பக்கோடா பொருளாதாரம்) என்பது சுயதொழில் மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்காக இந்தியாவில் நிறுவப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளைக் குறிக்கிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜீ ஊடகத்தின் பிரத்தியேக நேர்காணலின் போது, பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது இந்த வெளிப்பாடு உருவானது.[1] இப்பேட்டியிலிருந்து, இந்த குறிப்பிட்ட வாசகம் இந்தியத் துணைக் கண்டத்திற்குள் இதன் சுற்றுகளை உருவாக்கியது. எதிர்க்கட்சியினர் மற்றும் பொருளாதார விமர்சகர்கள் இதனைக் கடுமையாக விமர்சனம் செய்தனர்.[2]
'பக்கோடானோமிக்சு' என்ற சொல்லைக் கட்டுரையாளர் விவேக் கவுல் உருவாக்கியுள்ளார். இவர் பாண்டனோமிக்சு என்ற சொல்லையும் முன்னிலைப்படுத்த விரும்புகிறார்.[3]
வரலாறு
தொகுஇந்தியப் பிரதமர் நரேந்திர மோதி சனவரி 2018இல், தெரு உணவு விற்பனையாளர்களையும் (பக்கோடா விற்பவர்கள்) வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்களில் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார். இதனைக் கருத்தில் கொள்ளும்போது நாட்டில் வேலைவாய்ப்பின்மை புள்ளிவிவர அறிக்கையை விட மிகக் குறைவாக இருப்பதாகச் சனவரி 2018இல் தெரிவித்த கருத்திலிருந்து இந்த வார்த்தை உருவானது.[4]
பாஜக ஆட்சியின் போது இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய கவலைகளில் ஒன்று, அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதுதான். இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் ஒரு பத்து இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் புதிதாகப் பணியில் சேருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[5]
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவாகவும் பக்கோடானோமிக்சு ஏற்பட்டது. இது நவம்பர் 2016-இல் இந்தியாவில் 86% நாணயத்தைத் திடீரெனத் தடை செய்தது. இது பெரிய பொருளாதார எழுச்சிக்கு வழிவகுத்தது.[6]
பக்கோடானோமிக்சு என்பது அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் பிரச்சாரப் பேரணிகளிலும் தொலைக்காட்சிகளிலும் நகைச்சுவையாகத் தெரிவிக்கப்பட்டன. வர்ணனையாளர்கள் அரசாங்கத்தின் கொள்கைகளைத் தீவிரமாக விமர்சனம் செய்ய முயன்றனர். அரசாங்கத்தின் கொள்கைகள் போதுமான முறையான வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்பதை இவர்கள் வாதமாக உள்ளது.[7][8][9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Top 10 highlights of PM Narendra Modi's exclusive interview with Zee News". Zee News (in ஆங்கிலம்). 2018-01-19. பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.
- ↑ "How Jaitley chipped away atthe 'jobless growth' problem". @businessline (in ஆங்கிலம்). 2 February 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.
- ↑ Staff, Pragati (2018-01-29). "A Deep Dive Into Pakodanomics » Pragati". Pragati (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.
- ↑ "No good data on jobs available currently: PMEAC member Bibek Debroy" (in en-US). The Financial Express. 2018-02-09. http://www.financialexpress.com/economy/no-good-data-on-jobs-available-currently-pmeac-member-bibek-debroy/1060007/.
- ↑ "Amit Shah defending Pakodanomics in his maiden Rajya Sabha speech is worrying". www.dailyo.in. பார்க்கப்பட்ட நாள் 2018-02-13.
- ↑ "Note demonetisation: 86% of Indian currency has been frozen overnight". 9 November 2016.
- ↑ "Vantage Point: Stop gig-gling! It is time India took a serious look at Pakodanomics" (in en). Zee News. 2018-02-08. http://zeenews.india.com/blogs/vantage-point-stop-gig-gling-it-is-time-india-took-a-serious-look-at-pakodanomics-2079628.html.
- ↑ "'Pakodanomics' and employment" (in en). @businessline. http://www.thehindubusinessline.com/opinion/columns/from-the-viewsroom/pakodanomics-and-employment/article22545105.ece.
- ↑ "News18 Daybreak | The Jaitley Interview, Encounters in UP and Other Stories You May Have Missed". News18. http://www.news18.com/news/india/news18-daybreak-the-jaitley-interview-encounters-in-up-and-other-stories-you-may-have-missed-1651769.html.