பக்ராவுர்
பக்ராவுர் (Bakraur) இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள புத்தகயாவுக்கு சற்று கிழக்கில் இருக்கும் ஓர் ஊராகும். சில சமயங்களில் இவ்வூரை பக்ரோவுர் என்றும் அழைக்கிறார்கள். புத்தகயா நகரிலிருந்து நேரடியாக பால்கு நதிக்கு குறுக்காக பக்ராவுர் அமைந்துள்ளது. புத்தகயாவில் உள்ள போதி மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
கவுதம புத்தர் ஞானம் பெறுவதற்கு சற்று முன்னர் வரை அவருக்கு பால், அரிசிப்புட்டு முதலிய உணவுகளை ஊட்டிவிட்டவர் என்று நம்பப்படும் சுயாதாவின் கிராமம் இந்த பக்ராவுர் எனக் கூறப்படுகிறது [1][2]:32. பக்ராவுர் கிராமத்தில் சுயாதாவை நினைவுகூறும் வகையில் ஒரு தூபி பக்ராவுர் கிராமத்தில் எழுப்பப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Prasoon, Shrikant (2007). Knowing Buddha : [life and teachings]. [Delhi]: Hindoology Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788122309638.
- ↑ Dwivedi, Sunita; Lama, Dalai (foreword) (2006). Buddhist heritage sites of India. New Delhi: Rupa & Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8129107384.
புற இணைப்புகள்
தொகு- Sujata Stupa (YouTube)
- Bakraur on Google Maps