பங்காளர்
மிகப் பெரிய மூலதனம் தேவைப்படுகின்ற ஒரு வர்த்தக நிறுவனம், தனது மூலதனத்தை சிறு சிறு கூறுகளாக்கி அதைப் பொது மக்களிடமும் பிற நிறுவனங்ககளிடமும் விற்பனை செய்கிறது.மூலதனத்தின் சிறு கூறு அல்லது அலகு(பிரிவு) க்கு பங்கு (SHARE) என்று பெயர்.ஒரு பங்கின் முக மதிப்பு(NOMINAL / FACE VALUE) பத்து ரூபாய் இருக்கலாம்.எனவே பத்து இலட்ச ரூபாய் முதலீடு தேவையெனில் ஒரு நிறுவனம் , பத்து ரூபாய் முக மதிப்பு கொண்ட ஓர் இலட்சம் பங்குகளைப் பிறரிடம் விற்கிறது.இத்தகையப் பங்குகளை பணம் கொடுத்து வாங்குபவர்கள் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும்(SHAREHOLDER) உறுப்பினர்களாகவும் (MEMBER)ஆகிறார்கள். பங்குதாரர்களின் / உறுப்பினர்களின் உரிமைகள்:
- பங்குதாரர்கள் , நிறுவனம் நடத்தும் கூட்டங்களில் (இயக்குநர் குழுக் கூட்டம் தவிர) பங்கேற்கலாம்.
- வருடாந்திர பொது உறுப்பினர்கள் கூட்டம் போன்றவற்றில் பங்கு பெறுவதற்கான அழைப்பிதழைப் பெறும் உரிமை.
- மேற்கண்ட கூட்டங்களில் தமக்குப் பதிலாக பங்கேற்க வேறு ஒருவரை நியமிக்கும் உரிமை.
- நிறுவனத்தின் இலாபத்தில் பங்கு பெறும் உரிமை.
பங்குதாரர்களின் / உறுப்பினர்களின் கடமைகள் :