பசலிப்பழம்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
கிவி பழம் அல்லது பசலிப்பழம் (kiwifruit) என்பது தோல் பச்சையாகவும், உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும் பழம் ஆகும்.[1][2][3]
பசலிப்பழத்தின் சுவையும் பயனும்
தொகுஇதை நாம், கேக், பாஸ்ட்ரி ஆகியவற்றின் மீது அழகுக்காக வைத்திருப்பதைப் பார்த்திருக்கலாம். பழத்தின் சுவை புளிப்பு அல்லது துவர்ப்பாக இருக்கலாம். பசலிப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒட்டுமொத்த உடல்நலனுக்கு நல்லது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
பசலிப்பழத்தில் உள்ள உயிர் சத்துக்கள்
தொகுஅதில் உடல் நலனுக்குத் தேவையான சத்துக்கள் கொட்டிக் கிடப்பதாக அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது. ட்ரிவோலி கிராண்ட் ஓட்டல் நிபுணர் பாட் பசலிப்பழத்தில் ஏராளமான தாதுப்பொருட்கள், உயிர்ச்சத்துக்கள் உள்ளன என்று கூறியுள்ளார்.
"சிட்ரஸ்" ரக பழமான அதில் விட்டமின் "ஏ", "சி", "இ" அதிகம். தோல், இதய நோய்கள், புற்றுநோய், உடல் பருமன் உட்பட்ட பல நோய்களிலிருந்து இருந்து விட்டமின் சி நம்மைக் காக்கிறது.
விட்டமின் "சி" யின் பணிகளை விட்டமின் "இ" அதிகரிக்கும். இந்த இரண்டும் பசலிப்பழத்தில் அதிகம். இவை நமது உடலை எல்லா நோய்களில் இருந்தும் காக்கும் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Stirk, Bernadine (2005). "Growing Kiwifruit" (PDF). Pacific Northwest Extension Publishing. பார்க்கப்பட்ட நாள் 4 January 2013.
- ↑ Beutel, James A. (1990). "Kiwifruit". In Janick, J.; Simon, J.E. (eds.). Advances in new crops. Timber Press. pp. 309–316. பார்க்கப்பட்ட நாள் 11 September 2018 – via Center for New Crops & Plant Products at Purdue University.
- ↑ Ward, Carol; Courtney, David (2013). "Kiwifruit: Taking Its Place in the Global Fruit Bowl". Advances in Food and Nutrition Research. Vol. 68. Elsevier. pp. 1–14. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/b978-0-12-394294-4.00001-8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-394294-4.