பசுமைக் கணிமை
கணினியின் மூலம் செய்யப்படும் செயல்கள் கணிமைச் செயல்பாடுகள் எனப்படும். இவற்றை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதபடி செய்தலை பசுமைக் கணினி என்கின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க இயற்கை பொருட்களை பயன்படுத்துவதைப் போன்றது இது. கணினியை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், உருவாக்குதல், பயன்படுத்துதல், அழித்தல் உள்ளிட்டவை இதன் நோக்கம். கணினியுடன் தொடர்புடைய பொருட்களான திரை, அச்சுப்பொறி, நினைவக சாதனங்கள், தொலைத்தொடர்பு சாதனங்களும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு, அழிக்கப்பட வேண்டும். இத்தகைய சாதனங்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு, வேறு கருவிகளாக மாற்றம் பெறலாம். இதனால்,ம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.
அணுகுமுறைகள்
தொகு- தரவு மையங்கள் அதிகளவிலான மின்சாரத்தை எடுத்துக்கொள்கின்றன. இவற்றிலும் பசுமைக் கணிமை செயல்படுத்தப்படலாம்.