பசுரா (Basra, also written Basrah) (அரபு மொழி: البصرة; BGN: Al Başrah) என்பது பசுரா மாகாணத்தின் தலைநகரமாகும். இது ஈரானின் தெற்கில் சாட் அல்-அராப் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது குவைத்திற்கும், ஈரானிற்கும் இடையிலமைந்துள்ளது. 2012இன் மக்கள்தொகை கணிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1.5 மில்லியன் ஆகும்.[2] பசுரா ஈராக்கின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது.

பசுரா
البصرة
அல் பசுரா
Basrah city
Basrah city
அடைபெயர்(கள்): Venice of the East[1]
நாடு ஈராக்
மாகாணம்பாஸ்ரா மாகாணம்
Founded636 AD
அரசு
 • வகைMayor-council
 • MayorDr. Khelaf Abdul Samad
பரப்பளவு
 • மொத்தம்181 km2 (70 sq mi)
ஏற்றம்5 m (16 ft)
மக்கள்தொகை (2012)[2]
 • மொத்தம்2,750,000
நேர வலயம்+3 GMT
தொலைபேசி குறியீடு(+964) 40
இணையதளம்http://www.basra.gov.iq/

அமைவிடம்தொகு

பசுரா பாரசீகக் குடாவிற்கு கீழ் நோக்கி அமைந்துள்ள சாட் அல்-அராப் நீர்வழியில் அமைந்துள்ளது. சாட் அல்-அராப் நீர்வழி பசுராவின் கிழக்கு எல்லையும் மற்றும் பசுரா நீர்வழி பசுராவின் மேற்கு எல்லையையும் வரையறுக்கின்றன. இந்நகரம் நீர்ப்பாசனம் மற்றும் வேறு விவசாயப் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்ட நீரோடைகள் மற்றும் கால்வாய்களைக் கொண்ட ஒரு சிக்கலான வலையமைப்பால் ஊடுருவப்பட்டுள்ளது. இவ்வோடைகள் பொருட்களையும் மற்றும் மக்களையும் நகரம் முழுவதும் கொண்டு செல்ல போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் கடந்த இரு தசாப்தங்களாக இந்த நீரோடைகள் மாசடைந்ததாலும், தொடர் நீர்மட்ட வற்றலாலும் போக்குவரத்து செய்வது சாத்தியமாக இல்லை. பசுரா பாரசீகக் குடாவிலிருந்து 110 km (68 mi)இல் அமைந்துள்ளது.

காலநிலைதொகு

கோப்பென் காலநிலை வகைப்பாட்டின் அடிப்படையில் பசுரா சூடான பாலைவனக் காலநிலையைக் கொண்டுள்ளது. கடற்கரை ஓரமாக அமைந்துள்ளதன் காரணமாக பசுராவை சூழவுள்ள பிரதேசங்களை விட பசுரா அதிக மழைவீழ்ச்சியைப் பெறுகிறது. சூன் தொடக்கம் ஆகத்து வரையான கோடை கால மாதங்களில், பசுரா தொடர்ந்து உலகில் அதிக சூடான நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. சூலை தொடக்கம் ஆகத்து வரையில் 50 °C (122 °F) வெப்பநிலையைக் கொண்டு அதிக சூடாக காணப்படும். குளிர்காலத்தில் பசுரா சராசரி வெப்பநிலையாக 20 °C (68 °F) கொண்டு மிதமாக காணப்படும். குளிர்கால இரவுகளில் குறைந்த வெப்பநிலையாக 0 °C (32 °F) காணப்படும். இந்நகரம் சதுப்பு பாரசீக வளைகுடா அருகாமையில் இருப்பதன் காரணமாக சில வேளைகளில் 90%க்கும் அதிகமான ஈரப்பதத்தைக் கொண்டிருக்கும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், பசுரா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 17.7
(63.9)
20
(68)
24.5
(76.1)
30.6
(87.1)
36.8
(98.2)
39.7
(103.5)
41.3
(106.3)
41.8
(107.2)
39.9
(103.8)
34.9
(94.8)
27.1
(80.8)
20.3
(68.5)
31.22
(88.19)
தினசரி சராசரி °C (°F) 12.2
(54)
14.2
(57.6)
18.3
(64.9)
23.9
(75)
30.2
(86.4)
32.9
(91.2)
34.3
(93.7)
33.9
(93)
31.2
(88.2)
26.4
(79.5)
20.4
(68.7)
14.5
(58.1)
24.37
(75.86)
தாழ் சராசரி °C (°F) 6.8
(44.2)
8.4
(47.1)
12.2
(54)
17.2
(63)
23.6
(74.5)
26.2
(79.2)
27.4
(81.3)
26.1
(79)
22.6
(72.7)
18
(64)
13.7
(56.7)
8.7
(47.7)
17.58
(63.64)
பொழிவு mm (inches) 31
(1.22)
21
(0.83)
19
(0.75)
17
(0.67)
5
(0.2)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
3
(0.12)
23
(0.91)
33
(1.3)
152
(5.98)
சராசரி மழை நாட்கள் 6 5 5 4 2 0 0 0 0 1 4 5 32
Source #1: Climate-Data.org[3]
Source #2: Weather2Travel for rainy days and sunshine[4]

மேற்கோள்கள்தொகு

  1. Sam Dagher (18 September 2007). "In the 'Venice of the East,' a history of diversity". The Christian Science Monitor. http://www.csmonitor.com/2007/0918/p11s02-wome.html. பார்த்த நாள்: 2 January 2014. 
  2. 2.0 2.1 "Basra Governorate Profile". UN Joint Analysis Unit. பார்த்த நாள் 5 December 2014.
  3. "Climate: Basra - Climate graph, Temperature graph, Climate table". Climate-Data.org. பார்த்த நாள் 22 August 2013.
  4. "Basra Climate and Weather Averages, Iraq". Weather2Travel. பார்த்த நாள் 22 August 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுரா&oldid=2859388" இருந்து மீள்விக்கப்பட்டது