பசு அணைப்பு தினம்
பசு அணைப்பு தினம் (Cow Hug Day) என்பது பிப்ரவரி 2023 முதல் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட வருடாந்திர நிகழ்வாகும். இது பசுக்களைக் கட்டிப்பிடிப்பதன் மூலம் அன்பைக் காட்ட ஊக்குவிக்கிறது. இந்திய விலங்குகள் நல வாரியம்[1] அறிவிப்பில், காதலர் தினத்திற்குப் பதிலாகப் பிப்ரவரி 14 அன்று பசு அணைப்பு தினத்தினை[2][3] கடைப்பிடிக்குமாறு இந்தியா முழுவதும்[4] பசுப் பிரியர்களைக் கேட்டுக்கொண்டது.[5] இதன் மூலம் உணர்ச்சி வளம் அதிகரிக்கும் என்றும் "நமக்குத் தனிப்பட்ட மற்றும் கூட்டு மகிழ்ச்சியை அதிகரிக்கும்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசு அணைப்பு தினம் Cow Hug Day | |
---|---|
கடைபிடிப்போர் | இந்தியா |
வகை | தேசியம் |
முக்கியத்துவம் | பசுக்களை கட்டிப்பிடிப்பதன் மூலம் நேர்மறை, உணர்ச்சி வளம் மற்றும் கூட்டு மகிழ்ச்சியை அதிகரித்தல் |
கொண்டாட்டங்கள் | மாடுகளை கட்டிப்பிடித்து, வழிபடுவது, தன்படம் எடுப்பது |
நாள் | 14 பிப்ரவரி |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
முதல் முறை | 2023 |
மூலம் தொடங்கப்பட்டது | இந்திய விலங்குகள் நல வாரியம், இந்திய அரசு |
இதுகுறித்து அறிவிப்பு வெளியான ஒரு நாள் கழித்து, சமூக ஊடகங்களில் கேலிச்சித்திரங்கள் அதிகரித்த நிலையில் பசு அணைப்பு தினத்தைத் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்டது.[6]
பசுவை அரவணைத்தல்
தொகுஅமெரிக்காவில் கோவிட்-19 பெருந்தொற்று முழு அடைப்பின்போது, பசுக்களை அரவணைப்பதன் மூலம் மனநிறைவு மற்றும் அமைதியின் அனுபவங்களைச் சிலர் பெற்றதாகத் தெரிவித்துள்ளனர்.[7][8][9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Indian gov't says hug cows on Valentine's Day, Twitter cracks up". www.aljazeera.com.
- ↑ Sharma, Ashok (9 February 2023). "Indian government asks people to hug cows on Valentine's Day". The Washington Post. பார்க்கப்பட்ட நாள் 10 February 2023.
- ↑ "Embracing a controversy: What politicians said on 'Cow Hug Day'". India Today.
- ↑ "Celebrate February 14 as 'Cow Hug Day': Animal Welfare Board of India". February 8, 2023.
- ↑ "Valentine's Day thing of past? Govt says celebrate 'Cow Hug Day' on Feb 14". Hindustan Times. February 8, 2023.
- ↑ "No 'Cow Hug Day' On February 14, Centre Withdraws Appeal". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
- ↑ Lee, Bruce Y. "Cow Cuddling Services Are More Popular During Covid-19 Coronavirus Pandemic". Forbes.
- ↑ Gormly, Kellie B. (8 March 2021). "Cow cuddling has become a thing for lonely hearts in the pandemic". The Washington Post. பார்க்கப்பட்ட நாள் 10 February 2023.
- ↑ Mala, Elisa (July 12, 2019). "Move Over, Therapy Dogs. Hello, Therapy Cows" – via NYTimes.com.