பசைக் குச்சி

பசைக் குச்சி அல்லது ஒட்டுக் குச்சி (Glue stick) என்பது திருகும் அல்லது மேலே அழுத்தும் வகையிலான குழாய்களில் உள்ள ஒட்டுபொருளாகும். பயனர்கள் தங்களது கைகளில் பசை படாமல் இருப்பதற்காக குழாய்களை ஒட்ட வேண்டிய இடத்தின் மேற்பரப்பில் தேய்ப்பதன் மூலம் பசை பயன்படுத்தலாம்.

பிரிட் தயாரிப்பின் பசைக் குச்சிகள்

பயன்பாடு

தொகு

பெரும்பாலான பசைக் குச்சிகள் காகிதம் மற்றும் அட்டை அடுக்குகளை ஒன்றாக ஒட்டுவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளன, ஆனால் இவை திரவ வடிவிலான பசைகளைப் போல் வலுவாக இருப்பதில்லை. இவை கைவினை மற்றும் வடிவமைப்பு,அலுவலக பயன்பாடு மற்றும் பள்ளியில் பயன்படுத்தப்படலாம். இவற்றில் நிரந்தர, துவைக்கக்கூடிய, அமிலம் இல்லாத, நச்சுத்தன்மையற்ற, கரைப்பான் இல்லாத மற்றும் சாயம் கொண்டவை என பல வகைகள உள்ளன.

நிறுவனங்கள்

தொகு

1969 ஆம் ஆண்டில், செருமானிய நிறுவனமான ஹென்கெல் உதட்டுச் சாயம் இடுகருவிகளின் "ட்விஸ்ட்-அப் ஈஸி" மற்றும் கன்வீனியன்சு ஆகியவற்றைப் படித்த பிறகு பசை குச்சியைக் கண்டுபிடித்தது. இவை பிரிட் ஸ்டிக் எனும் நிறுவனத்தின் கீழ் வெளியிடப்பட்டது. 1971இல் பிரிட் ஸ்டிக் 38 நாடுகளில் விற்பனையானது, இவை 2001 இல் 121 நாடுகளில் விற்கப்பட்டது [1] கரைப்பான் இல்லாத மற்ற பொருட்களுக்கும் (எ.கா. மரம், கண்ணாடி மற்றும் சில நெகிழிகளில்) பயன்படுத்தக்கூடிய முதல் பல்நோக்கு பசைக் குச்சி "பவர்பிரிட்" ஆகும், இது 2003 ஆம் ஆண்டு சந்தையில் வெளியிடப்பட்டது [2] "பிரிட் எக்ஸ்" 2010 இல் தொடங்கப்பட்டது.

அளவுகள்

தொகு

பசைக் குச்சிகள் பல அளவுகளில் உள்ளது, 8 கிராம், 25 கிராம், 36 கிராம் மற்றும் 43 கிராம் ஆகியன மிகவும் பொதுவானவை.

பொருள்

தொகு

பலப்படித் தேறியம் மற்றும் போவிடோன் ஆகியன இதில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பொருட்களாகும். 2000 ஆம் ஆண்டு வரை, ஹென்கெல் நிறுவனம் பலப்படித் தேறியத்தைப் பயன்படுத்தாது இயற்கையான மாவுச்சத்தைப் பயன்படுத்துகிறது. [3]

சான்றுகள்

தொகு
  1. "Pritt History". Archived from the original on 2013-03-18. பார்க்கப்பட்ட நாள் 2013-05-06.
  2. "Pegamento Pritt para manualidades". Archived from the original on 9 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 9 October 2017.
  3. Potato power: how waste spuds are keeping the nation’s wallpaper in place, 11 September 2020
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசைக்_குச்சி&oldid=4109585" இலிருந்து மீள்விக்கப்பட்டது