பச்சவுர் மாடு

பச்சவுர் மாடு என்பது இந்தியாவைச் சேர்ந்த ஒரு மாட்டு இனம் ஆகும். [1][2] இவை இந்தியாவின் வடக்கு பீகாரின் மதுபனி மாவட்டம், தர்பங்கா மாவட்டம், சித்தமார்த்தி ஆகிய பகுதிகளை பூர்விகமாக கொண்டவை. இந்த இன மாடுகளின் உடல் அளவு கச்சிதமானதாகவும், சிறியதாகவும் இருக்கும், மேலும் இவை ஹரியாவி மாடுகளுடன், நெருங்கிய தன்மை கொண்டதாக உள்ளன. இதன் எருதுகள் நடுத்தர வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன, இவை இடத்திற்குத் தக்கவாறு தம்மை பழக்கிக்கிக் கொள்கின்றன [3] இந்த மாடுகள் இந்தியாவின் மற்ற நாட்டு மாடுகளை ஒப்பிடும்போது சிறப்பான அளவு பால் தருகின்றன மற்றும் இவை சிறப்பான இனப்பெருக்குச் சுழற்சிக்காக அறியப்படுகின்றன, [4] இந்த மாடுகள் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் பீகாரில் மிகப் பிரபலமாக இருந்தது. [5]

மேற்கோள்கள்

தொகு
  1. "BAchaur cattle - Origin and Distribution". Gou Vishwakosha - VishwaGou. Archived from the original on 29 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 16 May 2015.
  2. "National Dairy Development Board". Dairy Knowledge. பார்க்கப்பட்ட நாள் 18 May 2015.
  3. "Bachaur Cattle". Archived from the original on 19 May 2015. பார்க்கப்பட்ட நாள் 18 May 2015.
  4. Characteristics and performance of Bachaur cattle in the Gangetic plains of North Bihar
  5. "Breeds of Livestock - Bachaur Cattle". Department of Animal Science - Oklahoma State University. பார்க்கப்பட்ட நாள் 16 May 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சவுர்_மாடு&oldid=3587408" இலிருந்து மீள்விக்கப்பட்டது