பஞ்சநதிக்குளம் கிழக்கு தனுஷ்கோடீசுவரசுவாமி கோயில்

பஞ்சநதிக்குளம் கிழக்கு தனுஷ்கோடீசுவரசுவாமி கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

தொகு

இக்கோயில் வேதாரண்யத்திற்கு மேற்கில் முத்துப்பேட்டை செல்லும் சாலையில் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி

தொகு

இக்கோயிலில் உள்ள மூலவர் தனுஷ்கோடீசுவரர் என்றும் தென்கோடிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி மதுரபாஷினி ஆவார்.[1]

சிறப்பு

தொகு

பாண்டவர் காட்டுக்குச் சென்றபோது தீர்த்தமாடி இங்கு வழிபட்டுள்ளனர். அகத்தியருடைய அறிவுரையின்படி திருப்புனவாசலில் மழலைநாதரை வணங்கிவிட்டு பின்னர் அவர்கள் இக்கோயிலுக்கு வந்துள்ளனர். பாண்டவர் இங்கு ராமனை வழிபட்டதாகக் கூறுவர்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014

வெளியிணைப்புகள்

தொகு