பஞ்சநதிக்குளம் மேற்கு ராமசாமி கோயில்

பஞ்சநதிக்குளம் மேற்கு ராமசாமி கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அமைந்துள்ள வைணவக்கோயிலாகும்.

அமைவிடம்

தொகு

இக்கோயில் வேதாரண்யத்திற்கு அருகே பஞ்சநதிக்குளம் மேற்கு என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. [1]

இறைவன், இறைவி

தொகு

இக்கோயிலில் ராமர், சீதா, லட்சுமணர், அனுமாரோடு காணப்படுகின்றார். பாண்டவர் காட்டுக்குச் சென்றபோது இங்குள்ள ராமனை வழிபட்டுச் சென்றதாகக் கூறுவர்.[1]

அம்புவிடும் விழா

தொகு

இக்கோயிலில் ராமர் அம்பு விடும் காட்சியும், வீதியுலாவும் நவராத்திரி விழாவின்போது சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அண்மையில் அவ்விழாவின்போது பக்தி பஜனை, தாயார் திருமஞ்சனம், தீபாராதனை, சாற்று முறை போன்றவை நடைபெற்றன. விழாவின் மற்றொரு பகுதியாக விஜயதசமியன்று பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் நடைபெற்றது. வாழை மரங்கள் கட்டப்பட்ட பந்தலில் சுவாமியாக உருவகப்படுத்தப்பட்டவர் அம்பு எய்தும் வகையில் அம்பு விடும் காட்சி அமைந்தது. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014
  2. விழாவில் அம்பு எய்தல் நிகழ்ச்சி, தினமணி, 12 அக்டோபர் 2016[தொடர்பிழந்த இணைப்பு]