பஞ்சம்பட்டி

நி.பஞ்சம்பட்டி (Panjampatti) கிராமம் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் உள்ளது. இதன் ”நி” என்ற தலைப்பெழுத்து நிலக்கோட்டை என்பதைக் குறிப்பதாகும். பஞ்சம்பட்டி கிராமம் ஆத்தூர் வட்டத்திலேயே மிகப்பெரிய கிராமம் ஆகும். அதிக மக்கள்தொகை கொண்ட கிராமமும் ஆகும். திண்டுக்கல்லிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு பழைமை வாய்ந்த ”திரு இருதய ஆண்டவர் திருத்தலம்” என்ற கிறித்துவ தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த தேவாலயம் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது ஆகும். இவ்வூரில் கொண்டாடப்படும் பாஸ்கா விழா உலகப் புகழ் பெற்றதாகும். இக்கிராமத்தில் அதிக எண்ணிக்கையில் இராணுவ வீரர்கள் உள்ளனர். எனவே இக்கிராமத்திற்கு ’இராணுவபட்டி” என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சம்பட்டி&oldid=3539470" இலிருந்து மீள்விக்கப்பட்டது