பஞ்சாப் உயர்கல்வி ஆணையம்

பாக்கித்தான் உயர் கல்வி ஆணைய தன்னாட்சி அமைப்பு

பஞ்சாப் உயர்கல்வி ஆணையம் (Punjab Higher Education Commission) என்பது பாக்கித்தான் பஞ்சாபில் அமைந்துள்ள உயர் கல்வித் துறையின் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.[1] உயர் கல்வி ஆராய்ச்சி மற்றும் தரத்தை மேம்படுத்துவது, பஞ்சாபில் உள்ள பொது மற்றும் தனியார் துறை உயர் கல்வி நிறுவனங்களை அங்கீகரிப்பது போன்றவை இவ்வமைப்பின் செயல்பாடுகளாகும். 2015 ஆம் ஆண்டில் பஞ்சாப் உயர்கல்வி ஆணையம் நிறுவப்பட்டது.[2] 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பஞ்சாப் உயர்கல்வி ஆணையச் சட்டம் 2014 அங்கீகரிக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு சனவரி மாதம் நிறைவேற்றப்பட்டது.[3]

பஞ்சாப் உயர் கல்வி ஆணையம்
Punjab Higher Education Commission
சுருக்கம்ப.உ.க.ஆ
இருப்பிடம்லாகூர், பஞ்சாப், பாக்கித்தான்
வலைத்தளம்punjabhec.gov.pk

மேற்கோள்கள்

தொகு
  1. "Overview – PHEC". punjabhec.gov.pk (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-17.
  2. http://punjabhec.gov.pk/about-phec/
  3. http://punjablaws.gov.pk/laws/2584.html

புற இணைப்புகள்

தொகு