பஞ்சாயதனப் பூசை
அத்வைத மரபிலான ஆதிசங்கரரால் அறிமுகம் செய்யப்பட்ட பூசை முறை இதுவாகும்
அத்வைத மரபிலான ஆதிசங்கரரால் அறிமுகம் செய்யப்பட்ட பூசை முறை இதுவாகும். இதன்படி ஈஸ்வரன், அம்பிகை, விட்ணு, விக்னேசுவரர், சூரியன் ஆகிய ஐந்து தெய்வத் திருவுருவங்களையும் பஞ்சாயதனமாக ஒருங்கே வைத்துப் பூசிக்கப்படும். இவ்வைந்து தெய்வங்களில் எது விருப்பத்துக்குரியதோ அதை மூலவராக நடுவில் வைத்து ஏனைய நான்கையும் நான்கு மூலையிலும் வைத்து வழிபாடு செய்யப்படும். விக்கிரகங்கள் இல்லாவிட்டாலும் கூட அதற்கு ஒப்பான கற்களைக் கொண்டு பஞ்சாயதனத்தை அமைத்து வழிபடலாம்.