பஞ்சாயத்துகள் (பட்டியலிடப்பட்ட பகுதிகளின் விரிவாக்கம்) சட்டம் 1996
பஞ்சாயத்துகள் (பட்டியலிடப்பட்ட பகுதிகளின் விரிவாக்கம்) சட்டம் 1996 என்பது இந்திய அரசியலமைப்பின் 1992, 73 வது திருத்தச் சட்டத்திற்கு உட்படாத பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்காக இந்திய அரசாங்கத்தால் இயற்றப்பட்ட சட்டமாகும். இச்சட்டம் கிராம சபை தங்கள் இயற்கை வளங்களை நிர்வகிக்கும் அதிகாரத்தை வழங்குவதற்காக 1996-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் நாள் சட்டமாக்கப்பட்டது[1]. இச்சட்டம் இந்திய அரசியலமைப்பின் பகுதி 11-ல் சொல்லப்பட்டுள்ள பட்டியலிடப்பட்ட பகுதிகளின் பஞ்சாயத்துகளுடன் தொடர்புடைய வரைமுறைகளுக்கு நீட்சியாக உள்ளது.