பஞ்சு வெட்டும் கம்போடா

பஞ்சு வெட்டும் கம்போடா ஆற்றுமணலில் சிறுவர் விளையாடும் விளையாட்டு.

ஆடும் முறை

தொகு

நூல் நூற்பவர்கள் பஞ்சை ஒருவகை வில்லால் அடித்து விதைகளையும், வேண்டாத தூசிகளையும் நீக்கித் துய்மை செய்வர். இவ்வாறு தூய்மை செய்ய உதவும் வில்-கருவிக்குக் கம்போடா என்று பெயர். சிறுவர்கள் ஆற்றுமணலில் குழி பறித்து அதில் ஒருவரைக் குப்புறப் படுக்கவைத்துத் துணியால் மூடி, துணிமேல் மணலால் மூடுவர்.

பின் பாட்டுப்பாடுவர்.

பஞ்சு வெட்டும் கம்போடா தோளே தோளே
பருத்தி வெட்டும் கம்போடா தோளே தோளை

இப்படிப் பாடிவிட்டு மணலுக்குள் படுத்திருப்பவர் தோள் உணரும்படியாக மணலில் தட்டுவர்.
படுத்திருப்பவர் மண்ணைத் திமிரி எழுந்துகொள்வார்.

பின் வேறொருவரைப் படுக்கவைத்து விளையாடுவர்.கம்போடாவில் வெட்டும் பஞ்சு பிரிந்து தூய்மையாகி வெளிவருவது போல புதைக்கப்பட்டவர் எழுவதால் இந்த விளையாட்டுக்கு இந்தப் பெயர் வந்தது.

இவற்றையும் பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
  • ஞா.தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், ,சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியீடு, 1954
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சு_வெட்டும்_கம்போடா&oldid=1014047" இலிருந்து மீள்விக்கப்பட்டது