பஞ்ஞாவ்
பஞ்ஞாவ் என்பது கண்டோனிசு மொழியில் நண்பா அல்லது நண்பர் என்பதாகும். ஹொங்கொங்கில் வீதிக்கடைகள், சந்தைகள், போன்ற பொது இடங்களில் கொள்முதல் செய்வோரை அல்லது ஒருவரை விளித்துப் பேசுவதற்காக ஹொங்கொங்கர் இச்சொல்லைப் பயன்படுத்துகின்றனர். ஆண், பெண் இருப்பாலரையும் பஞ்ஞாவ் என்றே அழைப்பர்.
சிறப்பு
தொகுஇது முன்பின் தெரியாத ஒருவரையும், ஏற்றம் தாழ்வு அற்ற வகையிலும், ஆண் பெண் எனும் பேதங்கள் இன்றியும் பஞ்ஞாவ் (நண்பர்) என அழைப்பது ஹொங்கொங்கரின் தனிச் சிறப்பான குணங்களில் ஒன்றாகும்.
குறிப்பாக ஹொங்கொங்கர் அல்லாத வெளி நாட்டவரை "பஞ்ஞாவ்" என்றே இம்மக்கள் விளிக்கின்றனர்.
தொழில் சாலைகளில்
தொகுஹொங்கொங்கரின் தொழில் சாலைகள் மற்றும் கடைகள் போன்றவற்றில் தொழில் செய்வோரான இந்திய, பாக்கிசுத்தானிய, இலங்கை, வங்காளி போன்ற பிற நாட்டவர் எல்லோரையும் "பஞ்ஞாவ்" என்றே ஹொங்கொங்கர் அழைக்கின்றனர். கூலித்தொழிலாளர் என்றாலும் அதன் தொழில் தருநர் "பஞ்ஞாவ்" என்றே அழைப்பது இந்நாட்டு மக்களின் உயர் குணங்களில் ஒன்றாகும்.