படகிருசுண சாகூ

இந்திய விவசாயி

படகிருசுண சாகூ (Batakrushna Sahoo) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியாவார். கால்நடை வளர்ப்பில் இவர் செய்த பங்களிப்பிற்காக 2020 ஆம் ஆன்டில் இந்தியாவின் நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[1][2][3]

படகிருசுண சாகூ
Batakrushna Sahu
தேசியம்இந்தியர்
பணிவிவசாயி
விருதுகள்பத்மசிறீ (2020)

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

கோர்தா மாவட்டத்தின் சர்கானா கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான படகிருசுண சாகூ 1986 ஆம் ஆண்டில் மீன் வளர்ப்பைத் தொடங்கினார்.[4] பாரம்பரிய இனப்பெருக்க முறைகள் மூலம் பல விவசாயிகளுக்கு முட்டை உற்பத்தியில் பயிற்சி அளித்தார். இவருக்கு அரசிடம் இருந்து எந்த நிதி உதவியும் கிடைக்கவில்லை. ஒடிசாவில் உள்ள பல கல்லூரிகளின் மாணவர்களுக்கும் பயிற்சி அளித்தார்.[4]

விருது

தொகு

கால்நடை வளர்ப்பில் இவர் செய்த பங்களிப்பிற்காக 2020 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=படகிருசுண_சாகூ&oldid=4092239" இலிருந்து மீள்விக்கப்பட்டது