படத்தாள் வீச்சு
படத்தாள் வீச்சு (film latitude) என்பது எக்சு கதிர் படத்தாளின் பண்புக் கோட்டின் பயனுள்ள பகுதியான நேர்கோட்டுப் பகுதியினைக் குறிக்கப்படுகிறது. அடிப்பகுதியில் கதிர்வீச்சுக் கூடினாலும் அடர்த்திக் கூடுவதில்லை. அதுபோல் தோள்பகுதியில் குறைந்த அளவு அதிகரிக்கும் கதிர் வீச்சும் அதிக அடர்த்தியினைக் கொடுக்கிறது. எனவே பயனுள்ள பகுதியாக நேர்கோட்டுப் பகுதி உள்ளது. ஒரு படத்தாளின் இந்த பயனுள்ள பகுதியினைக் கொடுக்கும் கதிர்வீச்சளவு படத்தாளின் வீச்சு எனப்படும். இது படத்தாளின் காமாவைப் (γ) பொறுத்து மாறுபடுகிறது. காமா அதிகமாக இருந்தால் வீச்சு குறைவாக இருக்கும். காமா குறைவாக இருந்தால் வீச்சு அதிகமாக இருக்கும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Sprawls, Perry. "Film Contrast Characteristics". பார்க்கப்பட்ட நாள் 5 மே 2015.