படிகக்கூடு ஆற்றல்

படிகத் திண்மம் ஒன்றின் படிகக்கூடு ஆற்றல் (Lattice Energy) என்பது அயனிகள் ஒன்றாய்ச் சேர்ந்து, சேர்மம் ஒன்றின் மூலக்கூற்றினை உருவாக்கும் போது வெளியிடப்படும் ஆற்றலாகும். சேர்மத்தை உருவாக்கும் பொருட்டு அயனிகள் இணையும் போது தேவைப்படும் பிணைப்பு விசையை அளவிட இது பயன்படுகிறது. இந்தப் படிகக்கூடு ஆற்றலானது சேர்மத்தின் பல செயல்முறைப் பண்புகளான கரைதிறன், கடினத்தன்மை மற்றும் எளிதில் ஆவியாகக்கூடிய தன்மை ஆகியவற்றோடு மிக நெருங்கிய தொடர்புடைய பண்பாகும். படிகக்கூடு ஆற்றலானது, போர்ன் - ஏபர் சுழற்சியைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது அல்லது வருவிக்கப்படுகிறது.[1] அயனிச்சேர்மங்களின் நிலைத்தன்மையை விளக்குவதற்கு படிகக்கூடு ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. வாயு நிலையிலுள்ள அயனிகளைப் பிரித்தெடுப்பதில் உள்ள சிரமத்தின் காரணமாக, படிகக்கூடு ஆற்றலை நேரடியாக மதிப்பிட முடியாது. ஆனால், இந்த ஆற்றல் மதிப்பினை போர்ன்-ஏபர் சுழற்சியைப் பயன்படுத்தி கணக்கிடலாம்.

மேற்கோள்கள் தொகு

  1. Atkins, et al. (2010). Shriver and Atkins' Inorganic Chemistry (Fifth ). New York: W. H. Freeman and Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4292-1820-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=படிகக்கூடு_ஆற்றல்&oldid=2750059" இலிருந்து மீள்விக்கப்பட்டது