படிமவாதம்
படிமவாதம் , இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் தோற்றம் பெற்ற இலக்கிய இயக்கமாகும். கவிதையின் படிமத் துல்லியமும் எழுத்து நடையின் கூர்மையும் தெளிவும் இக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டது. வீரதீர வெற்றிச் சாகசக் கதைகளிலுள்ள போக்குகளை படிமவாதிகள் நிராகரித்தனர்.1914க்கும்1917இடைப்பட்ட காலப்பகுதியில் ஆங்கில இலக்கியத்தை ஆக்கிரமித்த நவீன ஆங்கிலக் கவிதைகளுக்கு இது வழிவகுத்தது.ஆங்கில இலக்கியத்தின் முதலாவது நவீன இலக்கிய அமைப்பாகவும் இதுவே கருதப்படுகிறது.[1] தாம் கூறவந்த கருத்துக்களுக்கும் உணர்ச்சிக்கும் காட்சிவடிவம் கொடுக்க படிமவாதிகள் முயன்றனர். அகவுருக்களைக் கட்டியெழுப்புதல் அவர்களின் தலையாய முயற்சியாயிற்று.[2] கவிதைக்குரிய கருக் பொருளைத் தெரிவுசெய்வதில் படிமவாதிகள் தாராண்மைப் போக்குடையவர்களாயிருந்தனர். படிமவாதம் கட்டற்ற கவிதையாக்கத்திற்குத் தூண்டு கோலாயிற்று.[2]
சான்று
தொகுபடிமக் கவிதை இயக்கத்தைச் சேர்ந்த ஹில்டா டூலிட்டில் எழுதிய குளம் கவிதை-
உனக்கு உயிர் உள்ளதா?
நான் உன்னைத் தொடுகிறேன் ஒரு கடல் மீனைப்போல் நீ நடுங்குகிறாய் என் வலையால் உன்னை மூடுகிறேன்,
என்னவாக இருக்கிறாய் நீ-கட்டுப்பட்டா?.
— ஹில்டா டூலிட்டில்
மேற்கோள்கள்
தொகு- Brooker, Jewel Spears (1996). Mastery and Escape: T. S. Eliot and the Dialectic of Modernism (University of Massachusetts Press). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55849-040-X.