படியளக்கும் விழா
படியளக்கும் விழா மதுரை நகர வீதிகளில் நடைபெறுகின்ற விழாவாகும்.
சோதனை
தொகுஉலகின் அனைத்து உயிர்களுக்கும் படி அளப்பதற்காக சிவபெருமான் புறப்பட்ட போது பார்வதி செய்த சோதனையே இந்த விழாவிற்குக் காரணமாக அமைந்தது. அவர் பாத்திரத்தில் ஒரு எறும்பினை அடைத்தார். அனைத்து உயிர்களுக்கும் படியளந்துவிட்டு வந்த சிவபெருமானிடம் ஒரு உயிருக்கு அவர் படியளக்கவில்லை என்று கூறினார். ஆனால் பாத்திரத்தைத் திறந்தபோது அதில் அந்த எறும்புக்கு அருகில் அரிசி இருந்தது. [1]
விழா
தொகுஇந்நிகழ்வினை நினைவுகூரும் வகையில் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமியில் இறைவனும், இறைவியும் மதுரை நகரின் வீதிகளில் அனைத்து உயிர்களுக்கும் படியளக்கும் வகையில் சப்பரததில் உலா வருவர். இவ்விழா தொடர்ந்து நடைபெறுகிறது. [1] இவ்விழாவினை படியரிசி விழா என்றும் அழைக்கின்றனர். [2]
பிற கோயில்கள்
தொகுதமிழ்நாட்டில் கீழ்க்கண்ட கோயில்களிலும் இவ்விழா நடைபெறுகிறது.
குறிப்புகள்
தொகு- ↑ சிவன் கோயில் என்றாலும் இங்கு அம்பிகை முக்கிய இடம் பெற்றுள்ளார். இப்பகுதியில் அபிராமி கோயில் என்றுதான் இக்கோயிலை அழைக்கின்றனர்.
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 அனைத்து உயிர்களுக்கும் படியளக்க நாளை அஷ்டமி சப்பரம் உலா, தினமலர் கோயில்கள், 4 சனவரி 2013
- ↑ மதுரையில் இன்று படியரிசித் திருவிழா, மக்கள் குரல், 13 ஜனவரி 2015
- ↑ ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா, தினகரன், 14 ஜனவரி 2015[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ சிவபெருமான் படியளக்கும் லீலை, அபிராமியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு, மாலை மலர், 22 டிசம்பர் 2016
- ↑ அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் கோயில், தினமலர் கோயில்கள்