படுமரத்து மோசிகீரனார்

சங்க கால புலவர்

படுமரத்து மோசிகீரனார் சங்ககாலப் புலவர். குறுந்தொகை 33, 75, 383 ஆகிய மூன்று பாடல்கள் இவரால் பாடப்பட்டவை. மூன்றும் அகத்திணைப் பாடல்கள்.

படுமரம் என்பது ஊரின் பெயர். மோசி என்பது தந்தை பெயர்.

பாடல் சொல்லும் செய்தி தொகு

இளமாணாக்கன் தொகு

குறுந்தொகை 33

பரத்தையிடம் பிரிந்த தலைவனுக்காகப் பாணன் தூது வருகிறான். தூதை ஏற்பதாகத் தலைவி தோழியிடம் சொல்கிறாள்.

இளமாணாக்கன் (தமிழ்). பிரம்மச்சாரி (வடமொழி)

அன்னாய்! இவன் ஓர் இளமாணாக்கன். இரந்து உண்ணும் பழக்கம் உடையவன். இப்போது ஒரு விருந்தாளியையும் கூட்டிக்கொண்டு வந்துள்ளான். (உணவு வழங்குவோம்) (விருந்தாளி - இங்குத் தலைவன்)

பொன்மலி பாடலி தொகு

குறுந்தொகை 75

தலைவன் பரத்தையிடமிருந்து திரும்பிக்கொண்டிருக்கிறான் என்று பாணன் தலைவியிடம் சொல்கிறான். தலைவி அவனை வினவுகிறாள். "வருவதை நீ கண்டாயா, அல்லது கண்டார் கூறக் கேட்டாயா? பொன்மலி பாடலியைப் பெற்றதாகச் சொல்லும் செய்தியை யார் வாய்க் கேட்டனை"

சோணை தொகு

சோணை ஆறு பாடலியில் ஓடிற்று. அதில் யானைகள் நீராடும்.

(புராணக் கதை கஜேந்திர மோட்சத்தின் நிழல்)

இன்றை அளவு கொன்றைக்கு தொகு

குறுந்தொகை 383

இன்று நீ அவனுடன் செல்வதற்கு உடம்பட்டாய். அதனால் நானும் அவனை வரச்சொன்னேன். அவனும் வந்திருக்கிறான். இப்போது நீயோ இன்றைய நாளை மட்டும் கொன்றக்கு ஒப்படைத்துவிட்டேன் என்று சொல்லிக் கையையும், காலையும் ஒடுக்கிக்கொண்டு நோன்பிருக்கிறாய் (கொன்றைப் பூச் சூடிய சிவனுக்கு இன்றைய பொழுது என்று சொல்லி நோன்பிருத்தல்) தீயில் பட்ட இளந்தளிர் போல நான் வாடி வதங்குவதைத் தவிர வேறு வழி இல்லை.

தோழி தலைவியிடம் இவ்வாறு கூறுகிறாள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=படுமரத்து_மோசிகீரனார்&oldid=3178823" இலிருந்து மீள்விக்கப்பட்டது