படைப்பாற்றல்
படைப்பாற்றல் அல்லது ஆக்கத்திறன் என்பது புதிய கருத்துக்களை, கருத்துருக்களை, அல்லது பொருட்களை ஆக்கக் கூடிய சிந்தனையையும் அதைச் செயற்படுத்த வல்ல ஆற்றலையும் குறிக்கிறது. படைப்பாற்றலை ஏதுவாக்குவதில் சமூகச் சூழமைவுக்கும் முக்கியப் பங்கு ஒன்றுண்டு. படைப்பாற்றல் பற்றி பல துறை கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. எனினும் ஒரு தெளிவான அறிவியல் வரையறை இன்னும் இல்லை.
பொதுவாகப் படைப்பாற்றல் கலைகளுடனும் இலக்கியத்துடனும் இணைத்துப் பார்க்கப்பட்டாலும் பொறியியல், அறிவியல், கட்டிடக்கலை, நகைச்சுவை, வணிகம் என பல துறைகளிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. படைப்பாற்றல் சிலருக்கு இயல்பாக அமைந்தாலும், பெரும்பான்மையானோர் இதைப் படிப்பறிவாலும் பட்டறிவாலும் பெறுகின்றனர்