படை (தோல் வியாதி)

படை என்று அழைக்கப்படும் இவ்வகை தோல் வியாதி சருமத்தினில் பாதிப்பு ஏற்படுத்தும் நோய்களுள் ஒன்று.[1] வெளிர் சிவப்பு நிறத்திலான சருமம், சருமத்தினில் அதிகம் அரிக்கும் தன்மை மற்றும் புடைப்புகள் ஏற்படுதல் இதன் விளைவுகள் ஆகும். அத்துடன் அந்த சரும பகுதிகளில் எரிச்சல் கொடுக்கக்கூடிய தன்மை அல்லது உணர்வினை எதிர்மறையாக்குதலை ஏற்படுத்தும்.[2] பெரும்பாலான நேரங்களில் இது ஒவ்வாமையினால் ஏற்படுகிறது. இருப்பினும் சில படை தோல் வியாதிகள் ஒவ்வாமை இல்லாத காரணங்களிலும் ஏற்படுகின்றன.

படை தோல் வியாதிகள் பெரும்பாலும் ஆறு வாரங்களில் குணமடையக் கூடியவை, இவை கடுமையான அரிக்கும் தடிப்புகள் கொண்ட தோல் வியாதியாகும். இவை ஒவ்வாமையினால் தூண்டிவிடப்படும் நோயாகும். இது தவிர இருக்கும் ஏனைய தோல் வியாதிகள் ஆறு வார காலத்திற்கும் மேல் நீடிக்குமாயின் அவை நாள்பட்ட அரிக்கும் தடிப்புகள் கொண்ட தோல் வியாதிகளாகக் கருதப்படும். இவை எவ்வித ஒவ்வாமை காரணங்கள் இல்லாமலே தொடர்ந்து பாதிப்பினை ஏற்படுத்தும். இவ்வித நாள்பட்ட தோல் வியாதிக்கான காரணங்களில் சுமார் 50 சதவீதத்திற்கும் மேல் கண்டறியப்படாமலே உள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேருக்கு, இயற்கையாக உடலிலுள்ள பொருட்களுக்கு எதிராக தூண்டு பொருட்கள் உருவாவதால் இந்த நாள்பட்ட தோல் வியாதி தொடர்வதாக கண்டறியப்பட்டுள்ளது.[3]

அறிகுறிகள்

தொகு

புடைப்புகளுடன் கூடிய சிவப்பு அடிப்பாகம் கொண்ட சருமம் இதன் பிரதான அறிகுறியாகும். இது சருமத்தின் மேற்பரப்பில் எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இவை ஒவ்வாமை அல்லது ஒவ்வாமை அல்லாத பிற காரணங்களினால் ஏற்படலாம். இது சருமத்தின் மேலோட்டமான இரத்த நாளங்களில் இருந்து திரவக் கசிவு ஏற்படுத்தும், இந்த தடுப்புகள் போன்ற தோற்றம் கொண்ட சருமம் சில இஞ்ச் முதல் பெரிய அளவிலான விட்டம் கொண்டதாகவும் இருக்கும்.

தூண்டுதலுக்கான சாத்தியக்கூறுகள்

தொகு

பல வகையான தூண்டு காரணிகள் படை தோல் வியாதியினை ஏற்படுத்தும். அவற்றுள் சில பின்வருமாறு: [4]

  • பூச்சி கடி
  • ஒவ்வாமை
  • சில வேதிப்பொருட்கள்
  • சில தாவரங்கள்
  • குறிப்பிட்ட மருந்துகள், நோய், தொற்று கிருமிகள்
  • சில உணவுப் பொருட்கள்
  • சூரிய ஒளி, வெப்பம், குளிர் போன்ற இயற்கைக் காரணிகள்

காரணிகள்

தொகு

மருந்துப் பொருட்களால் தூண்டப்படுதல்

தொகு

சில வகையான மருந்துப் பொருட்கள் உடலுக்கு ஏற்றாற்போல் அமையாததால் ஒவ்வாமை ஏற்பட்டு படை ஏற்படலாம். அவ்வகை மருந்துப் பொருட்களில் கோடீனை, டெக்ஸ்ட்ரோம்ஃபெடமின், [5] ஆஸ்பிரின், இப்யூபுரூஃபன், பென்சிலின், க்ளோட்ரிமஸோல், டிரிசாஸோல், சல்போனமைடுகள், வலிப்படக்கிகள், செஃபல்க்ளோர், பிரசெடம் மற்றும் நீரிழிவு எதிர்ப்பு மருந்துகள் போன்றவை பிரபலமானவை. மருந்துப் பொருட்கள் ஒவ்வாமையினால் இதயம் மற்றும் நுரையீரல் ஆகிய இரண்டும் பாதிப்படையும் அளவிற்கு செல்லலாம். ஒவ்வாமையினை ஏற்படுத்தும் மருந்துப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது சிறந்தது.

தொற்று அல்லது சுற்றுச்சூழல் காரணிகள்

தொகு

நாள்பட்ட அரிக்கும் தடிப்புகள் கொண்ட படை நோயானது மற்றவர்களுக்கு தொற்று நோயாக வாய்ப்பும் உள்ளது. இது போன்ற பரவும் தன்மை தொடுதலால் ஏற்படவும் செய்யலாம். இது உருஷியோல் என அழைக்கப்படுகிறது. இது தொடுதலால்கூட பரவலாம், இதனை வலுவான கிரீஸ் அல்லது எண்ணெயில் கரையக்கூடிய பொருட்கள் மற்றும் குளிர்ந்த நீர், தேய்க்கக் கூடிய களிம்புகள் போன்றவற்றினால் உடனடியாக தடுத்துவிட முடியும்.

உடல் அழுத்த தூண்டு காரணி

தொகு

இது உடலில் ஏற்படும் அழுத்த மாற்றங்களினால் ஏற்படும். உடற்பயிற்சி செய்தல், குளித்தல், சூடான சுற்றுப்புறச் சூழல் கொண்ட பகுதிகளில் வசித்தல் அல்லது உணர்வுபூர்வமான அழுத்தங்கள் போன்றவற்றினால் இந்த வகை படை தோல் நோய் தூண்டப்படும். இவை மற்றவை போன்றல்லாமல் சிறியதாகவும், மிகக் குறைவான காலத்தினால் அழிந்துவிடுவதாகவும் இருக்கும். [6][7] இவை விரைவாக குணமாகிவிடும். இவற்றில் வெவ்வேறு வகையான தூண்டுதல்கள் ஏற்படுவதால் முறையான மருத்துவரிடம் இருந்து, தனித்துவமான சிகிச்சை தேவைப்படுகிறது.[8][9]

குளிர்

தொகு

சில வகை சரும பாதிப்புகள் குளிர்ச்சியான சுற்றுபுறச் சூழல், ஈரமான சூழ்நிலையில் ஏற்படுகிறது. இவை குளிரால் தூண்டப்படும் படை தோல் வியாதியாகும். இதில் இருவகைகள் உள்ளன.

ஒரு வகை பரம்பரையாக வரக்கூடிய படை நோயாகும். இது பெரும்பாலும் அனைவரையும் தாக்குவதில்லை. இது உடலில் குளிர்ச்சி உருவாக ஆரம்பித்த 9 முதல் 18 மணி நேரத்திற்குள் உடலில் சருமத் தடிப்புகளை ஏற்படுத்தும்.

இது தவிர ஏற்படும் மற்றொரு வகை பொதுவாக ஏற்படக்கூடிய வகையினைச் சார்ந்தது. உடலில் குளிர்ச்சி பரவத் தொடங்கிய சில மணி நேரங்களில் முகம், கழுத்து அல்லது கைகளில் தடுப்புகளாகத் தோன்றும். இது பொதுவாக பெரும்பாலானவர்களுக்கு ஏற்பட்டாலும் சில வேளைகளில் சராசரியாக ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் வரை தொடரக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 18 வயது முதல் 25 வயது வரையுள்ள இளைஞர்கள் ஆவர். இவர்களுக்கு

குளிர்ந்த நீரில் நீச்சல் செய்வது பாதிப்பினை ஏற்படுத்தும் ஒவ்வாமையாக உள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகளும் கடுமையாக இருக்கும். இதனால் உடலில் அதிகமாக சுரக்கப்படும் ஹிஸ்டமின் உடலில் குறைந்த அழுத்தத்தினை ஏற்படுத்துதல், மயக்கம் மற்றும் அதிர்ச்சி போன்றவற்றினை ஏற்படுத்தலாம். சிலவேளைகளில் உயிரினைக்கூட பறிக்கும் அபாயம் உள்ளது. முழங்கைப் பகுதியில் பனிக் கட்டிகளைக் கொண்டு ஐந்து நிமிடங்கள் வரை தேய்க்கும் போது அப்பகுதி குணமடையும். இது போன்ற சூழ்நிலைகளில் தோன்றும் படை தோல் நோயானது மற்றவர்களைப் போன்றதல்ல. இதில் பாதிப்பு கொண்டவர்கள் உடல் வெப்பநிலை குறைவு ஏற்படுவதில் அதிக கவனமுடன் இருக்க வேண்டும்.

குறிப்புகள்

தொகு
  1. "urticaria": Oxford English Dictionary. 2nd ed. 1989. OED Online. Oxford University Press. 2 May 2009.
  2. http://www.webmd.com/skin-problems-and-treatments/guide/hives-urticaria-angioedema[full citation needed]
  3. "Chronic urticaria and autoimmunity". Skin Therapy Lett 18 (7): 5–9. Dec 2013. பப்மெட்:24305753. http://www.skintherapyletter.com/2013/18.7/2.html. 
  4. "Urticaria". drbatul.com. பார்க்கப்பட்ட நாள் 28 March 2016.
  5. "Prescribing Information Dexedrine". GlaxoSmithKline. June 2006.
  6. Moore-Robinson, Miriam; Warin, Robert P. (1968). "Some Clikical Aspects of Cholhstergic Urticaria". British Journal of Dermatology 80 (12): 794–9. doi:10.1111/j.1365-2133.1968.tb11948.x. பப்மெட்:5706797. 
  7. Hirschmann, J. V.; Lawlor, F; English, JS; Louback, JB; Winkelmann, RK; Greaves, MW (1987). "Cholinergic Urticaria<subtitle>A Clinical and Histologic Study</subtitle>". Archives of Dermatology 123 (4): 462–7. doi:10.1001/archderm.1987.01660280064024. பப்மெட்:3827277. 
  8. Nakamizo, S.; Egawa, G.; Miyachi, Y.; Kabashima, K. (2012). "Cholinergic urticaria: Pathogenesis-based categorization and its treatment options". Journal of the European Academy of Dermatology and Venereology 26 (1): 114–6. doi:10.1111/j.1468-3083.2011.04017.x. பப்மெட்:21371134. 
  9. Bito, Toshinori; Sawada, Yu; Tokura, Yoshiki (2012). "Pathogenesis of Cholinergic Urticaria in Relation to Sweating". Allergology International 61 (4): 539–44. doi:10.2332/allergolint.12-RAI-0485. பப்மெட்:23093795. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=படை_(தோல்_வியாதி)&oldid=3583365" இலிருந்து மீள்விக்கப்பட்டது