பட்டகக் காந்த வட்டை அளவாய்வு

பட்டகக் காந்த வட்டை அளவாய்வு (Prismatic Compass Survey) அளவாய்வு செய்வதற்குப் பயன்படும் முதன்மையான கருவிகளில் காந்த வட்டையும் ஒன்றாகும். காந்தத் தன்மை ஏற்றப்பட்ட ஊசி ஆடி அசைந்து நிலைக்கு வரும் போது தென்வடல் திசையிலேயே நிற்கும். இந்த அடிப்படை உண்மையைப் பயன்படுத்தி புவிப்பரப்பில் திசை அறிவதற்குப் பயன்படும் கருவி காந்தவட்டை (அல்லது) திசை வட்டை என்று அழைக்கப்படுகிறது.

வட்ட வடிவமான தட்டுகளில் அமைக்கப்படுவதால் வட்டை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். பொதுவாகக் கட்டிடங்களைச் சாியான திசைகளில் அமைப்பதற்கும், வேறு பல பணிகளுக்கும், கடலில் திசை அறிவதற்கும் காந்த வட்டை பயன்படுகிறது.

காந்த வட்டையின் முதன்மையான உறுப்புகள் தொகு

  1. காந்த ஊசி
  2. பாகை அளவு வருவியுள்ள வட்டை
  3. பாா்வைக் கோடு முதலியவையாகும்.

காந்த வட்டை பட்டகக் காந்த வட்டை என்றும் அளவையாளா் காந்த வட்டை என்றும் இருவகைகளில் பயன்பட்டு வருகிறது.

மேற்கோள் தொகு

சேதுராக்காயி ச. (2005), புவிப்படவியல் ஓா் அறிமுகம். சண்முகம் பதிப்பகம், மதுரை-7.