பட்டவராயன்
பட்டவராயன் என்பவர் இந்து சமய சிறுதெய்வ வழிபாட்டில் வணங்கப்படும் நாட்டார் தெய்வங்களுள் ஒருவராவார். முத்துப்பட்டனின் பிற்பெயரான பட்டன் என்பதிலிருந்து பட்டவராயன் என்ற பெயரில் வணங்குகிறார்கள்.
முத்துப்பட்டன் கதை சுருக்கம்
தொகுமுத்துப்பட்டன் எனும் பிராமணர் குலத்தில் பிறந்தவர், பொம்மக்கா, திம்மக்காக மேல் காதல் கொண்டார். அவர்களை மணமுடிக்க சக்கிலி போல பூணுல் போன்றவைகளை அகற்றி, செருப்பு தைக்கும் தொழிலைச் செய்தார். இவர்கள் மூவருக்கும் திருமணம் நடந்தது.
மாடுகளை கவர்ந்து சென்ற வன்னியர்களிடமிருந்து மீட்க போர் புரிந்தார். வெற்றியும் பெற்றார். முத்துப்பட்டன் தன் உடலிலுள்ள குருதியைக் கழுவும் போது, முதுகில் ஒருவர் தாக்க இறந்து போனார்.
காணிக்கை
தொகுபட்டவராயன் சாமிக்கு காணிக்கையாக செருப்பினை தருகிறார்கள். இது மிகவும் வினோதமானதாகும்
கோவில்
தொகுகாரையார் சொரிமுத்து ஐயனார் கோவில் [1]
ஆதாரங்கள்
தொகு- ↑ http://temple.dinamalar.com/New.php?id=1246 அருள்மிகு சொரிமுத்து ஐயனார் கோவில் - தினமலர் கோயில்கள்