பட்டாம்பூச்சி வலை
பட்டாம்பூச்சி வலை (Butterfly net)(சில நேரங்களில் வான் பூச்சி வலை என்று அழைக்கப்படுகிறது) என்பது பூச்சிகளை சேகரிக்கப் பயன்படுத்தப்படும் பல வகையான வலைகளுள் ஒன்றாகும். வலையின் முழுப் அமைப்பும் பொதுவாக மென்மையான பட்டாம்பூச்சி இறக்கைகளின் சேதத்தைக் குறைக்கும் வகையில் இலகுரக கண்ணி மூலம் கட்டமைக்கப்படுகிறது. பூச்சி சேகரிப்பில் பயன்படுத்தப்படும் மற்ற வகை வலைகளில் பீட் வலைகள், நீர் வாழ் உயிரி வலைகள் மற்றும் வீச்சுவலை ஆகியவை அடங்கும். வெவ்வேறு பூச்சிகளைப் பிடிப்பதற்கான வலைகள் வெவ்வேறு கண்ணி அளவுகளைக் கொண்டுள்ளன. நீர் வாழ் உயிரிகளைப் பிடிக்கப்பயன்படும் வலைகள் பொதுவாகப் பெரிய, 'திறந்த' கண்ணிகளைக் கொண்டிருக்கும். சிறிய நீர்வாழ் உயிரினங்களைப் பிடிக்க பொதுவாகப் பூச்சி வலை பயன்படுத்தப்படுகிறது.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Taron, Doug. "Gossamer Tapestry." : Some Thoughts on Butterfly Nets., 10 Apr. 2009. Web. 4 May 2012.
- ↑ "Butterfly net - Entomologists' glossary - Amateur Entomologists' Society (AES)". www.amentsoc.org. பார்க்கப்பட்ட நாள் 2022-11-13.
வெளி இணைப்புகள்
தொகு- பூச்சிகள் மற்றும் பூச்சிகளை சேகரித்தல் மற்றும் பாதுகாத்தல்: கருவிகள் மற்றும் நுட்பங்கள் USDA மிகவும் விரிவான ஆன்லைன் கையேடு