பட்டுக்குடி பசுபதீசுவரர் கோயில்
பட்டுக்குடி பசுபதீசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சியில் உள்ள பட்டுக்குடியில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
தொகுகாவிரியின் வட கரையிலும், கொள்ளிடத்தின் தென்கரையிலும் உள்ளது. [1] வடகுரங்காடுதுறை கோயிலுக்கு வடக்கேயும், கணபதி அக்ரகாரம் கணபதி கோயிலுக்குக் கிழக்கேயும் அமைந்துள்ளது.
மூலவர்
தொகுஇக்கோயிலின் மூலவர் பசுபதீசுவரர் ஆவார். இறைவி மங்களாம்பிகை. இங்கு நடைபெறுகின்ற சத்ரு சம்கார பூசை மிகவும் சிறப்பு பெற்றதாகும். [2]
முருகன் கோயில்
தொகுசிவன் கோயிலாக இருந்தாலும் முருகன் கோயில் என்றே உள்ளூரில் அழைக்கின்றனர். முருகன் இங்கு வள்ளிதேவசேனையுடன் உள்ளார்.
குடமுழுக்கு
தொகுஇக்கோயிலின் குடமுழுக்கு ஆவணி மாதம் 7ஆம் நாள் 23 ஆகத்து 2018 அன்று நடைபெற்றது. [3]
மேற்கோள்
தொகு- ↑ பட்டுக்குடி முருகன் கோயில், தினமலர் கோயில்கள், 13 மே 2016
- ↑ ராதாபாலு, சத்ரு சம்ஹாரர், தீபம், 20 நவம்பர் 2015
- ↑ பட்டுக்குடி முருகன் கோயில் கும்பாபிஷேக விழா, தினமணி, 24 ஆகஸ்டு 2018