பட்டுக்கோட்டை கோட்டை சிவன் கோயில்

பட்டுக்கோட்டை கோட்டை சிவன் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம் தொகு

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை நகரின் மேல் பகுதியில் இக்கோயில் உள்ளது.

இறைவன், இறைவி தொகு

இங்குள்ள இறைவன் சந்திரசேகரர், இறைவி மங்களாம்பிகை. மூலவரை பிறைசூடும் தம்பிரான் என்றும் கூறுகின்றனர்.[1]

வரலாறு தொகு

சோழர்களால் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பாண்டிய, விஜயநகர மன்னர்களால் புதுப்பிக்கப்பட்ட இக்கோயில் பின்னர் மாலிக் காபூர் படையெடுப்பிற்குப் பின் சிதிலமடைந்த நிலையில் இருந்தது.[1]

பிற சன்னதிகள் தொகு

இக்கோயிலில் நாடியம்மன், தெட்சிணாமூர்த்தி, சப்தமாதர்கள், வீரபத்திரர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், குபேரன், நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்டோர் காணப்படுகின்றனர். 60 ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெறாமல் இருந்த இக்கோயிலில் விரைவில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 குடமுழுக்குக்குக் காத்திருக்கும் கோட்டை சிவன் கோயில், தினமணி, 2017 விளம்பரச் சிறப்பிதழ், 31 டிசம்பர் 2016