பட்டுக்கோட்டை புராதனவனேசுவரர் கோயில்

பட்டுக்கோட்டை புராதனவனேசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

தொகு

இக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் அமைந்துள்ளது. இவ்வூர் கதிர்வேய்ந்த மங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கிருந்து 15 கிமீ தொலைவில் திருச்சிற்றம்பலம் என்னுமிடத்தில் வயல்வெளியில் எமன் இருக்கின்றார்.[1]

இறைவன், இறைவி

தொகு

இக்கோயிலின் மூலவராக புராதனவனேசுவரர் உள்ளார். இறைவி பெரியநாயகி அம்மாள் ஆவார்.[1]

வரலாறுபு

தொகு

வாழ்க்கையின் ஒரு கூறாக வனவாசம் தேவை என்பதை உணர்த்த சிவபெருமான், தேவியுடன் இந்த பழம்பெரும் வனத்திற்கு வந்து தங்கினார். அவருடன் தேவர்களும், சித்தர்களும், துறவிகளும்கூட வந்தனர். நீண்ட நாள் தியானத்தில் இறைவன் இங்கிருந்தார். அக்காலகட்டத்தில் அசுரர் பலம் அதிகமாக ஆகிவிட அவர்களிடமிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள தேவர்களும், ரிஷிகளும் இறைவியிடம் முறையிட்டு வேண்டினர். இறைவி, மன்மதனை அழைத்து இறைவனின் தவத்தைக் கலைக்கலாம் என்று கருத்து கூறினார். மன்மதனும் உலக நன்மைக்காக மலர்க்கணையைத் தொடுத்து இவ்விடம் பூ வனமாகும்படி செய்தார். ஆதலால் இவ்வூர் மதன்பட்டவூர் என்று அழைக்கப்பட்டது. இறைவன் அருளால் மன்மதன் பின்னர் உயிர் பெற்றார். பால் தெளித்து மன்மதன் உயிர் பிறப்பிக்கப்பட்டதால் இவ்விடம் பாலத்தளி எனப்படுகிறது. மன்மதன் எனப்படும் காமனை எரித்ததை நினைவுகூறும் விதமாக காமன் கொட்டல் என்னுமிடத்தில் காமன் விழா நடைபெறுகிறது. இறைவி சன்னதியின் வலப்புறம் உள்ள விநாயகர் செவித்துவாரங்களில் வேண்டுதலை நினைத்து மலரை வைக்கும்போது அது உள்ளே இழுத்துக்கொண்டால் நினைத்தது நிறைவேறும் என பக்தர்கள் நம்புகின்றனர். இவரை பூ விழுங்கும் விநாயகர் என்று கூறுகின்றனர். [1]

திருவிழாக்கள்

தொகு

மகா சிவராத்திரி இக்கோயிலில் நடைபெறும் திருவிழாவாகும்.[1]

மேற்கோள்கள்

தொகு