பணமதிப்புப் போர்

பணமதிப்புப் போர் (Currency war) அல்லது போட்டியிட்டு மதிப்புக் குறைத்தல் (competitive devaluation ) என்பது உலக நாடுகள் தங்கள் நாட்டின் பணமதிப்பைக் குறைத்தலில் ஒன்றுக்கொன்று போட்டியிடுதல் ஆகும்.

பெரும்பொருளாதார மந்தம்தொகு

1930களில் ஏற்பட்ட உலகப் பெரும் பொருளாதார மந்தத்தின் விளைவாகப் பல நாடுகள் தங்க முறையைக் கை விட்டன. இதனால் பணத்திற்கு உள்ளார்ந்த மதிப்பு இல்லாது போய் நாடுகளில் வேலை வாய்ப்பின்மை ஏற்பட்டது. ஏற்றுமதிக்கு நாடுகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டன. தங்கள் நாட்டின் பணமதிப்பைக் குறைப்பதன் மூலம் பல நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதிப்படையச் செய்தன. இது அயலாரை வறியோராக்கும் கொள்கைகளுள் ஒன்றாகும்.

கிரேட் பிரிட்டன், ஃபிரான்சு, ஐக்கிய அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளே 1930களின் பணமதிப்புப் போரில் முக்கியமாக ஈடுபட்டவை.

தற்போதைய நிலைதொகு

தற்போதைக்கு ஐக்கிய அமெரிக்காவும் சீனாவும் பணமதிப்புப் போரில் ஈடுபட்டுள்ளன.[1][2] இவை ஒன்றுக்கு ஒன்று எதிராக மட்டுமின்றி பிற வளரும் நாடுகளையும் குறிப்பாக யூரோ மதிப்பை அதிகம் உயர்த்தியுள்ளன.[3]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பணமதிப்புப்_போர்&oldid=3248771" இருந்து மீள்விக்கப்பட்டது