பண்டா கார்த்திகா ரெட்டி
பண்டா கார்த்திகா ரெட்டி (Banda Karthika Reddy)(பிறப்பு 17 ஆகத்து 1977) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தெலங்காணாவின் பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியின் முன்னாள் மாநகரத்தந்தை ஆவார். இவர் 2009-ல் ஐதராபாத்து மாநகராட்சியின் முதல் மாநகரத் தந்தை ஆவர். கார்த்திகா ரெட்டி பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ளார்.
பண்டா கார்த்திகா ரெட்டி Banda Karthika Reddy | |
---|---|
ஐதரபாத்து மேனாள் மாநகரத் தந்தை | |
பதவியில் 2009–2012 | |
முன்னையவர் | தீகால கிருஷ்ண ரெட்டி |
பின்னவர் | முகமது மஜ்ஜீத் உசேன் |
தொகுதி | சிக்கந்தராபாத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 17 ஆகத்து 1977 ஐதராபாத்து (இந்தியா), தெலங்காணா, |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | பண்டா சந்திர ரெட்டி |
பிள்ளைகள் | கனிஷ்க் ரெட்டி & சொளமிக் ரெட்டி |
வாழிடம்(s) | தமாகா, ஐதராபாத்து |
இணையத்தளம் | bandakarthikareddy.com |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுகார்த்திகா ரெட்டி 1977ஆம் ஆண்டு ஆகத்து 17ஆம் தேதி இந்தியாவின் ஐதராபாத்தில் பிறந்தார். இவர் உசுமானியா பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இவர் விளையாட்டு வீராங்கனையும் ஆவார்.[1]
அரசியல் பணி
தொகுகார்த்திகா திசம்பர் 2009-ல் பெருநகர ஐதராபாத்தின் முதல் மாநகரத் தந்தையானார்.[2] இவர் 2010ஆம் ஆண்டு அகில இந்திய மாநகரத்தந்தை குழுவின் துணைத் தலைவரானார். கார்த்திகா 2020-ல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[3]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுகார்த்திகா ரெட்டி, காங்கிரசு கட்சியைச் சேர்ந்த பண்டா சந்திர ரெட்டியை மணந்தார்.[2] இவர்களுக்கு கனிஷ்க் மற்றும் சோமிக் என இரு மகன்கள் உள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "City gets its mayor". The Times Of India. 5 December 2009. https://timesofindia.indiatimes.com/city/hyderabad/City-gets-its-mayor/articleshow/5302630.cms. பார்த்த நாள்: 19 May 2018.
- ↑ 2.0 2.1 The Hindu : Front Page : Kartika Reddy first Mayor of GHMC
- ↑ "In setback to Congress, former Hyderabad Mayor Karthika Reddy joins BJP". The News Minute (in ஆங்கிலம்). 2020-11-19. பார்க்கப்பட்ட நாள் 2022-11-15.