பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும் (நூல்)

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரால் எழுதி வெளியிடப்பட்ட நூல் பண்டைத் தமிழ்

நாகரிகமும் பண்பாடும் ஆகும். 1966இல் பதிப்பிடப்பட்ட இந்நூல் 240 பக்கங்களை உள்ளடக்கியதாகும். இதில் தமிழர் நாகரிகம் மொழி, துப்புரவு, ஊன், உடை, அணி, உறையுள், ஊர்தியும் போக்குவரத்தும், வாழ்க்கைவகை, சமயவொழுக்கம், தொழில்கள், வாணிகம், அரசியல், கல்வி, அறிவியல்கள் ஆகியனவாக வகைப்படுத்திக் கூறப்படுகிறது. பண்பாடு மக்களைக் கொண்டு, பொது, அந்தணர் பண்பாடு, அரசர் பண்பாடு, வணிகர் பண்பாடு, வேளாளர் பண்பாடு, பிறவகுப்பார் பண்பாடு, கள்வர் பண்பாடு, பெண்டிர் பண்பாடு எனப் பிரித்துச் சொல்லப்படுகின்றது.

முன்னுரை

தொகு

நாகரிகம் சொற்பிறப்பு

தொகு

நகர்+அகம் என்பது புணர்ந்து நகரகம் ஆகிப் பின் திரிந்து நகரிகம் என்றாகி அதன் பின்னர் நாகரிகம் என்று திரியும். மாந்தர் முதன்முதலில் நகர நிலையிலேயே நாகரிகம் அடைந்தமையால் நாகரிகப் பெயர் அதனின்றே தோன்றியது.

பண்பாடு சொற்பிறப்பு

தொகு

பண்படுதல் என்றால் சீர்படுத்தல் அல்லது திருத்தல் எனப்பொருள் படும். நிலத்தைப் பண்படுத்தல் என்றால் நிலத்தை பயிர்செய்யத்தக்கவாறு சீர்படுத்தலாம். ஆகவே மனிதர் பண்படுவது பண்பாடு ஆகும். ஆகவே தமிழில் பண்பு என்பது ஒருவரில் காணப்படும் பண்படுத்தப்பட்ட நல்ல தன்மைகளையும், இயல்பு என்பது இயற்கையாகவே காணப்படுவனவற்றினையும் குறிக்கும்.

நாகரிகத்திற்கும் பண்பாட்டுக்கும் வேறுபாடு

தொகு

பாவாணர் திருந்திய வாழ்க்கை பண்பாடு என்றும் அதாவது "உள்ளத்திற்குப் புறம்பான உணவு, உடை, உறையுள் முதலியவற்றின் செம்மை" நாகரிகம் என்றும், திருந்திய ஒழுக்கம் அதாவது "உள்ளத்தின் செம்மை" பண்பாடு எனவும் குறிப்பிடுகிறார்.

முன்னுரையில் மேலதிகமாக இந்திய நாகரிகம் தமிழரதே ஆதல் பற்றியும், இந்திய நாகரிகம் ஆரியரதே எனக் காட்டக் கையாளப்படும் வழிகள் பற்றியும், குமரிக்கண்ட இடப்பெயரும் மூவேந்தர் குடிப்பெயரும் ஆகியன பற்றியும் கூறப்படுகிறன.

மேற்கோள்கள்

தொகு