பண்டைய தமிழகத்தின் தொழில்கள்

சங்க காலத்தில், தமிழகத்தின் தொழில்கள் வேளாண்மைக்கு துணைபுரியும் விதத்திலேயே இருந்தன. இவை குடிசைத் தொழில்களாகவும், ஆலையைச் சார்ந்தவையாக அல்லாமலும் இருந்தன. கருமான்கள் மற்றும் தச்சர்கள் வேலை செய்கின்ற பணிக்கூடங்களோ அல்லது பட்டறைகளோ தான் ஒரு வகையில் ஆலைகள் என்ற வகைப்பாட்டில் அடங்கின.நெசவு, முத்துக்குளித்தல், கொல்லர் தொழில் மற்றும் கப்பல் கட்டுதல் ஆகியவை பண்டைய தமிழ் நாட்டில் காணப்பட்ட முக்கிய தொழில்களில் சில. மதுரை மற்றும் உறையூரில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட பருத்தி மற்றும் பட்டுத் துணிகளுக்கு பெரும் தேவையும், வரவேற்பும் இருந்தது; இந்தப் பகுதிகளிலிருந்து தயாராகும் துணி வகைகள் அவற்றின் உயர் தரத்திற்காக நன்கு அறியப்பட்டிருந்தது. கொற்கை முத்து வணிகத்தின் மையமாகத் திகழ்ந்தது. இங்கு எடுக்கப்பட்ட முத்துகள் தமிழகத்தில் மட்டுமல்லாது, வட இந்தியா மற்றும் ரோம் நகர் வரையிலும் விரும்பப்பட்ட முத்து வகைகளாக இருந்தன.கொல்லர் தொழில் ஒரு இன்றியமையாத தொழிலாக இருந்தது, ஏனென்றால், அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்பட்ட பல கருவிகள் மற்றும் பொருள்கள் கொல்லர்களால் உற்பத்தி செய்யப்பட்டவையாக இருந்தது. கடல் கடந்த வணிகமானது, கப்பல் கட்டும் தொழில் சிறந்து விளங்கக் காரணமாக இருந்தது. இதன் காரணமாக கடல் மற்றும் ஆற்றில் பயன்படுத்தக்கூடிய பொருட்களை செய்யக்கூடிய கைவினைத் தொழில்களும் செழித்தன. இந்தக் காலகட்டத்தில், தச்சு, மீன்பிடித்தல், உப்பு உற்பத்தி மற்றும் கட்டுமானம் போன்ற பல துணைத்தொழில்களும் வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்தன.

நெசவு தொகு

நெசவு மிகவும் முக்கியமான தொழிலாக இருந்தது. வேளாண்மைக்கு அடுத்ததாக, நூல் நூற்பு மற்றும் நெசவு பரவலாக பயிற்சி அளிக்கப்பட்ட கைவினைத் தொழில்களாக இருந்தன. நெசவுத் தொழில் பலரால் முழு நேரத் தொழிலாக மேற்கொள்ளப்பட்டது. கூடுதலாக, கிராமப் பகுதிகளில், விவசாயிகள் நெசவை பகுதி நேரத் தொழிலாகவும் செய்து வந்தனர்.பெண்கள் தங்கள் ஓய்வு நேரத்தை பருத்தி நூல் நூற்பில் செலவழித்தனர். மேலும், இரவு நேரங்களில் திரி விளக்கின் மங்கலான ஒளியில் கூட நூற்பினைத் தொடர்ந்தனர். மதுரை மற்றும் உறையூர் நெசவுத்தொழிலின் முக்கியமான மையங்களாக இருந்தன. மேலும், இந்த நகரங்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்ட பருத்தி துணிகளுக்காக நன்கு அறியப்பட்ட நகரங்களாக இருந்தன. மசுலின் என்றழைக்கப்பட்ட மென்துகில் துணி வகைகள், வெவ்வேறு நிறங்களில், நாகப்பாம்பினால் உரிக்கப்பட்ட தோல் அல்லது மேகத்தின் மேன்மையோடு ஒப்பிடப்பட்டது. பட்டுத் துணிகள் பட்டிழைகளால் நெய்யப்பட்டு ஓரப்பகுதிகளில் சிறு முடிச்சுகளுடன் தயாரிக்கப்பட்டன.பூத்தையல் கலையும் கூட அறியப்பட்டிருந்தது. பிரபுக்கள் மற்றும் உயர்குடிமக்கள் பூத்தையல் வகை ஆடைகளின் முக்கிய வாடிக்கையாளர்களாக இருந்தனர். நெசவுத் தொழிலின் பரந்து விரிந்த துணைத் தொழிலாக சாயத்தொழில் விளங்கியது. இடுப்பில் அணியும் துணி வகைகளுக்கு நீல நிற சாயம் மக்கள் மத்தியில் மிகவும் பிடித்த வண்ணமாக இருந்தது. பட்டு மற்றும் பருத்தித் துணிகள் தவிர, சையரி மரவுரி மற்றும் நார்மதியா என்ற மரத்தூள் கொண்ட துணி சமயச் சடங்குகள் செய்வோரால் பயன்படுத்தப்பட்டது. பட்டு, கம்பளி மற்றும் பிற துணிகள் இயற்கை மூலங்களைக் கொண்டவையாதலால் இயற்கை இழைகள் என குறிப்பிடப்படுகின்றன.[1] மதுரை சந்தைகளில், கம்பளி பொருட்கள், பருத்தி மற்றும் பட்டுத் துணிகளுடன் இணைந்து விற்கப்பட்டன. துணி உற்பத்தியாளர்கள் ஒரு நேரத்தில் நீளமான துணிகைள நெய்து அவற்றை விற்பகர்களிடம் விற்பனை செய்பவர்களாக இருந்தனர்.[2] துணி விற்பகர்கள் துணிகளை தேவையான நீளத்திற்கு கத்திரித்து எடுத்து துணித் துண்டுகளாக மாற்றிக்கொள்வர். இவ்வாறு கத்திரிக்கப்பட்டவை அறுவை அல்லது துணி என விற்பனையின் போது அழைக்கப்படுகிறது. இத்தகைய விற்பகர்கள் அறுவை வணிகர் என்றும் இவை விற்பனை செய்யும் இடங்கள் அறுவை வீதிஎனவும் அழைக்கப்பட்டன. தைக்கப்பட்ட துணிகள் மக்களால் அணியப்பட்டன. மதுரையிலும் மற்ற பெரிய நகரங்களிலும் இருந்த தையலர்கள் துண்ணகாரர் என அழைக்கப்பட்டனர். [3] நெசவானது மலைப்பகுதிகளோடு இணைந்ததாய் இல்லை. அத்தகைய இடங்களில் வாழ்க்கை தொடர்பான குறிப்புகளில் பருத்தி ஆடைகள் பற்றிய குறிப்புகள் ஏதுமில்லை.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Venkata Subramanian. பக். 86. 
  2. 2.0 2.1 Sivathamby. பக். 173–174. 
  3. Subrahmanian. Sangam Polity. பக். 240–241.