பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் (இந்திய அரசியலமைப்பு)
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பகுதி 3ல்[1], பிரிவு 29 மற்றும் 30ன் படி 6 அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். அரசியலமைப்பு சட்டப் பிரிவு 29 மற்றும் 30 சமயச் சிறுபான்மை மக்களும் மற்றும் மொழிவாரிச் சிறுபான்மை மக்களும் தங்களது பண்பாடு மற்றும் கல்வியைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமைக்கு உத்தரவாதம் வழங்குகிறது.[2][3]
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 29
தொகுஇந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 29, மக்களின் பண்பாடு மற்றும் கல்வி குறித்தான அடிப்படை உரிமைகள் குறித்து பேசுகிறது.
- அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 29 (1):, இந்தியாவின் சிறுபான்மை மக்கள் பின்பற்றும் சமயம், பண்பாடு, மொழி மற்றும் எழுத்து முறையை பாதுகாக்கும் உரிமையை வழங்குகிறது.
- சட்டப் பிரிவு 29 (2): இனம், மதம், சாதி, மொழி அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு நபருக்கும் தன்னால் பராமரிக்கப்படும் அல்லது அதிலிருந்து உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கையை அரசு மறுக்கக் கூடாது.
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 30
தொகுஅரசியலமைப்புச் சட்டப் பிரிவு 30, சமயம் மற்றும் மொழிவாரி சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிறுவி நிர்வகிப்பதற்கான உரிமையை வழங்குகிறது.
- சட்டப் பிரிவு 30 (1): அனைத்து மத மற்றும் மொழி சிறுபான்மையினருக்கும் அவர்கள் விரும்பும் கல்வி நிறுவனங்களை நிறுவவும், நிர்வகிக்கவும் உரிமை வழங்குகிறது.
சட்டப் பிரிவு 30(2): கல்வி நிறுவனங்களுக்கு உதவி வழங்கும் போது, மதம் அல்லது மொழி அடிப்படையில் சிறுபான்மையினரின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது என்ற அடிப்படையில் எந்தக் கல்வி நிறுவனத்திற்கும் அரசு பாகுபாடு காட்டக் கூடாது.