பண்பாட்டுச் சந்தை

பிராங்போட் கல்வியினரின் சிந்தனையில் நுகர்வோர் பண்பாடு அல்லது பண்பாட்டுச் சந்தை (Culture industry, டாய்ச்சு: Kulturindustrie) எனும் எண்ணக்கரு முக்கிய இடம் பெறுகிறது. Max Horkheimer, Theoder.W.Adorna ஆகிய இருவரும் இணைந்து எழுதிய 'Dialectic of Enlightenment [1947]' என்ற நூலில் ' பண்பாட்டுச்சந்தை அல்லது அறிவொளிகால மாயை' என்ற கட்டுரையில் இச்சிந்தனைப் போக்கை காணலாம். அமெரிக்க கும்பல் கலாச்சாரத்தினை ஆராய்ந்த இவர்கள் அக்கலாச்சாரப் பண்பாட்டுத் தளத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையும் எடுத்துக் காட்டுவதாக அமைகிறது. வெகு ஜன மக்களின் நுகர்வுக்காக உருவாக்கப்படும் பண்பாட்டுக் கூறுகள், செவ்வியல் கலை மற்றும் பண்பாடுகளை அழிக்கும் அபாயம் உள்ளது என்று அடோர்னா மற்றும் ஹோர்க்கெய்மர் கூறுகின்றனர். பண்பாடு மற்றும் கலைகளின் சந்தைமயமாக்கல் வெகுஜன பண்பாட்டு வடிவங்களுக்கான பொலியான தேவையை உண்டாக்கி மக்களின் உண்மைத் தேவைகளை மறக்கச் செய்கின்றன் என்பது இவர்கள் கூற்று.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்பாட்டுச்_சந்தை&oldid=1588759" இருந்து மீள்விக்கப்பட்டது