பண்பாட்டுச் சார்பியம்

பண்பாட்டுச் சார்பியம் (Cultural relativism) என்பது, தனி மனிதனுடைய நம்பிக்கைகள், நடவடிக்கைகள் என்பவற்றை அவனுடைய சொந்தப் பண்பாட்டின் அடிப்படையிலேயே புரிந்துகொள்ள முடியும் எனக் கூறும் ஒரு கொள்கை ஆகும். இக் கொள்கை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பத்தாண்டுகளில் பிரான்ஸ் போவாஸ் என்பவரின் ஆய்வுகள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு, அவரது மாணவர்களால் பின்னர் பிரபலமாக்கப்பட்டது.[1][2][3]

பண்பாடுச் சார்பியம் குறிப்பிட்ட அறிவாய்வியல் (epistemological) மற்றும் ஆய்வுமுறை அம்சங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. இத் தத்துவத்தை நன்னெறிச் சார்பியத்துடன் குழப்பிக்கொள்ளக்கூடாது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Cultural relativism". The Encyclopedia of World Problems and Human Potential. 12 December 2017. பார்க்கப்பட்ட நாள் 27 May 2020.
  2. Boas, Franz. 1887. "Museums of Ethnology and their classification." Science 9:589.
  3. Lowie, Robert. 1917. Culture and Ethnology. New York: Douglas C. McMurtrie.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்பாட்டுச்_சார்பியம்&oldid=4100348" இலிருந்து மீள்விக்கப்பட்டது